பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
எல்லைப் பகுதிகளில் குழந்தைக் கடத்தலை தடுக்க உள்கட்டமைப்புகளை உருவாக்க அரசு திட்டம்
प्रविष्टि तिथि:
11 JUL 2023 2:00PM by PIB Chennai
இளம் பெண்கள் குறிப்பாக பெண் குழந்தைகள் உள்பட கடத்தலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு இல்லங்களை அமைக்க எல்லைப் பகுதிகளில் உள்ள மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்கு நிதி உதவி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. வீடுகள் தங்குமிடம், உணவு, உடை, ஆலோசனை, ஆரம்ப சுகாதார வசதிகள் மற்றும் பிற அன்றாடத் தேவைகள் போன்ற சேவைகளை அரசு வழங்கும்.
வாத்சல்யா திட்ட வழிகாட்டுதல்களின்படி, இப்படிக் கடத்தப்பட்டோரின் நலன் காப்போரை அடையாளம் கண்டறிய, பாதிக்கப்பட்ட சிறுமிகள் குழந்தைகள் நல ஆணையத்தின் முன்பு ஆஜர்படுத்தப்படுவார்கள், அதன்படி, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் தேவையானதைச் செய்யுமாறு கோரப்படும்.
நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மனித கடத்தல் தடுப்பு பிரிவுகளை அமைப்பதற்கு/ வலுப்படுத்த நிர்பயா நிதியின் கீழ் அனைத்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. கூடுதலாக, எல்லைப் பாதுகாப்புப் படைகளுக்கும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இன்றுவரை, 30 எல்லைக் காவல் படைகள் உட்பட 788 மனிதக் கடத்தல் தடுப்பு அலகுகள் செயல்படுகின்றன.
ஆட்களைக் கடத்தி நாட்டிற்குள் கொண்டு வருவதில் இந்தியா இலக்கு நாடாக உள்ளது. இந்தியாவில் சிறந்த வாழ்க்கை, வேலை ஆகிய போர்வையில், நேபாளம், பங்களாதேஷ் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளிலிருந்து பெண்களும் சிறுமிகளும் கடத்தப்படுகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் 18 வயது நிறைவடையாத பெண்கள்/இளைய வயதுடைய பெண்கள். அவர்கள் இந்தியாவிற்கு வந்த பிறகு விற்கப்பட்டு, வணிகரீதியான பாலியல் தொழிலில் தள்ளப்படுகிறார்கள்.
இந்தப் பெண்கள் பெரும்பாலும் மும்பை டெல்லி, ஹைதராபாத் போன்ற முக்கிய நகரங்களை அடைகிறார்கள், அங்கிருந்து அவர்கள் நாட்டிற்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டு முக்கியமாக மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் கொண்டு சேர்க்கப் படுகிறார்கள் இதனால்தான், இந்த நாடுகளின் எல்லையோர மாநிலங்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1938648
***
AD/PKV/GK
(रिलीज़ आईडी: 1938736)
आगंतुक पटल : 201