கலாசாரத்துறை அமைச்சகம்
3-வது ஜி-20 கலாச்சாரப் பணிக்குழுவின் தொடக்க அமர்வு கர்நாடக மாநிலம், ஹம்பியில் நடைபெற்றது
Posted On:
10 JUL 2023 12:45PM by PIB Chennai
3-வது ஜி-20 கலாச்சாரப் பணிக்குழுக் கூட்டத்தின் தொடக்க அமர்வு இன்று கர்நாடகா மாநிலம் ஹம்பியில் நடைபெற்றது. மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் திரு.பிரகலாத் ஜோஷி இந்த அமர்வில் உரையாற்றினார்.
அப்போது உரையாற்றிய அவர், கலாச்சாரத்தை மையமாகக் கொண்டு கொள்கைகளை வகுப்பதற்காக 4 விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். அவை, கலாச்சாரத்தின் அடையாளமாக உள்ள பகுதிகளைப் பாதுகாத்தல் மற்றும் சீரமைத்தல், பாரம்பரியம் மூலம் நிலையான எதிர்காலத்தைப் பெறுதல், கலாச்சாரம் மற்றும் கலை சார்ந்த பொருளாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் கலாச்சாரத்தின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்கான டிஜிட்டல் தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல் ஆகும்.
”இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கூட்டத்தில் பங்கேற்பதோடு மட்டுமல்லாமல், கலாச்சார மாற்றத்திலும் பங்கேற்பவர்களாகவும் இருப்பர்” எனவும் அவர் கூறினார். பன்முகத்தன்மை கொண்ட இந்த உலகில், கலாச்சாரமே நம் அனைவரையும் பிணைக்கும் நூல் என்றும் அவர் கூறினார்.
இந்தக் கலாச்சாரப் பணிக்குழுக் கூட்டத்தில், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் வகையில் மிகப்பெரிய எம்பிராய்டரி கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. லம்பானி சமூகத்தைச் சேர்ந்த 450-க்கும் மேற்பட்ட பெண் கலைஞர்களினால் செய்யப்பட்ட பொருட்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1938384
***
AP/CR/GK
(Release ID: 1938467)
Visitor Counter : 121