உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம்/விமான நிலையங்கள் பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம்/ இந்திய விமான நிலையங்கள் ஆணையங்களில் உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

Posted On: 06 JUL 2023 4:22PM by PIB Chennai

விமானப் போக்குவரத்து துறையில் இந்தியா வளர்ச்சி அடைந்து உலகின் 3-வது மிகப்பெரிய சந்தையாக திகழ்கிறது. பசுமை கொள்கையின் கீழ் புதிய விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதுடன் உதான் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படாத விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

 இதன் மூலம் இத்துறைக்கு மனிதவளத் தேவை மேலும் அதிகரித்துள்ளது. இதையடுத்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் பணியாளர்கள் கட்டமைப்பை விரிவுபடுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ):

இதில் 400 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதன் மூலம் இத்துறையில் பாதுகாப்பான சூழலை அளிக்கும்.

விமான நிலையங்கள் பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் (ஏஇஆர்ஏ):

இது இந்தியாவில் விமான நிலையங்களின் பொருளாதார ஒழுங்குமுறையை கண்காணிக்கும் தன்னாட்சி ஒழுங்குமுறை அமைப்பாகும். இத்துறையில் புதிதாக 10 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (ஏஏஐ):

இதில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் பணிக்கு  கூடுதலாக 796 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

***

AP/IR/AG/RJ


(Release ID: 1937803) Visitor Counter : 215