மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

இந்தியாவுக்கும், பேரிடர் ஆற்றல் உள்கட்டமைப்புக்கான கூட்டணிக்கும் இடையிலான தலைமையக உடன்படிக்கைக்கு அங்கீகாரம் வழங்க அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 28 JUN 2023 3:51PM by PIB Chennai

2022-ம் ஆண்டு ஆகஸ்ட்  மாதம் 22-ம் தேதி, மத்திய அரசுக்கும் பேரிடர் ஆற்றல் உள்கட்டமைப்புக்கான கூட்டணிக்கும் (சிடிஆர்ஐ) இடையே கையெழுத்தான தலைமையக உடன்படிக்கைக்கு (ஹெச்கியூஏ) அங்கீகாரம் வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடித் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.  

2019 செப்டம்பர் 23-ம் தேதி, நியூயார்க்கில் நடைபெற்ற ஐநா பருவநிலை நடவடிக்கை உச்சிமாநாட்டின் போது, பிரதமர் திரு நரேந்திர மோடி, சிடிஆர்ஐ-யை தொடங்கிவைத்தார்.  மத்திய அரசு தொடங்கிய மிகப்பெரிய உலக அளவிலான முன்முயற்சியான இது, பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் கட்டுப்பாட்டு விஷயங்களில் உலகத் தலைமைக்கான இந்தியாவின் முயற்சிகளாக இது பார்க்கப்பட்டது.

சிடிஆர்ஐ-யையும் நிறுவுவதற்கு 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.  2019-20 முதல் 2023-24 வரை 5 ஆண்டு காலத்துக்கு சிடிஆர்ஐ-க்கு ரூ.480 கோடி நிதி ஆதரவுக்கும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.  

இதன் தொடர்ச்சியாக 2022-ம் ஆண்டு ஜூன் 29-ம் தேதி மத்திய அமைச்சரவை, சிடிஆர்ஐ-யை சர்வதேச அமைப்பாக அங்கீகரிக்க ஒப்புதல் வழங்கியது.  தலைமையக உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்கும்  ஒப்புதல் வழங்கப்பட்டது.

மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு இணங்க கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி, மத்திய அரசுக்கும், சிடிஆர்ஐ-க்கும் இடையே தலைமையக உடன்படிக்கை கையெழுத்தானது.  

***

AP/PKV/RJ/KRS


(Release ID: 1935953) Visitor Counter : 221