பிரதமர் அலுவலகம்
காஷ்மீரின்செழுமையானக் கலாச்சாரம், கலைகள் மற்றும் கைவினைப்பொருட்களை காட்சிப்படுத்தும்விடாஸ்டா என்னும் காஷ்மீர் திருவிழா நிகழ்ச்சிக்கு பிரதமர் பாராட்டு
Posted On:
28 JUN 2023 2:28PM by PIB Chennai
காஷ்மீரின் செழுமையானக் கலாச்சாரம், கலைகள் மற்றும் கைவினைப்பொருட்களை காட்சிப்படுத்தும் அருமையான விடாஸ்டா என்னும் காஷ்மீர் திருவிழா முன்முயற்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
காஷ்மீரின் செழுமையானக் கலை, கலாச்சாரம், இலக்கியம், கைவினைப்பொருட்கள் மற்றும் உணவு வகையை நாடு முழுவதும் எடுத்துக்காட்டும் வகையில், விடாஸ்டா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் தொடங்கி ஸ்ரீநகரில் முடிவுற்ற தொடர் நிகழ்ச்சிகளில், காஷ்மீர் கலாச்சசாரம் பற்றி அறிந்துகொள்ள இளைஞர்களிடையே ஆர்வமும், உற்சாகமும் நிலவியது. கருத்தரங்குகள், கலை முகாம்கள், பயிலரங்குகள், கைவினைப்பொருட்கள் கண்காட்சிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள், காஷ்மீரின் கலாச்சாரத்தை மக்களிடையேக் கொண்டு செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காஷ்மீர் கலாச்சாரத்துடன் இணையும் வகையில், மக்கள் இதில் கலந்துகொண்டனர்.
விடாஸ்டா நிகழ்ச்சியின் அமிர்தப் பெருவிழா குறித்த ட்விட்டருக்கு பிரதமர் பதிலளித்துள்ளதாவது:
“இந்த அற்புதமான முயற்சிக்கு பல வாழ்த்துக்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு, "விடாஸ்டா - காஷ்மீர் திருவிழா" நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு மாநிலத்தின் செழுமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பற்றி அறிய வாய்ப்பளித்துள்ளது. மேலும், இந்த நிகழ்வு நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் ஒரு சிறந்த முயற்சியாகும்.”
***
(Release ID: 1935857)
AP/PKV/RJ/KRS
(Release ID: 1935876)
Visitor Counter : 161
Read this release in:
Kannada
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu