புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்

2023 –ஆம் ஆண்டு ஜூன் 29-ம் தேதி புள்ளியியல் தினம் கொண்டாடப்படுகிறது

Posted On: 28 JUN 2023 10:18AM by PIB Chennai

புள்ளியியல் மற்றும் பொருளாதாரத் திட்டமிடல் துறைகளில் மறைந்த பேராசிரியர் பிரசண்டா சந்திர மஹாலனோபிஸின் சீரிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் அவரது பிறந்த நாளான ஜூன் 29-ம் தேதி ஆண்டுதோறும் புள்ளியியல் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக சமூகப் பொருளாதாரத் திட்டமிடலில் புள்ளியியலின் முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினரிடையே எடுத்துச் செல்லும் விழிப்புணர்வை உருவாக்கும் முயற்சிகள் இந்த நாளில் மேற்கொள்ளப்படும்.

இந்த ஆண்டு புள்ளியியல் தின சிறப்பு நிகழ்ச்சி புதுதில்லியில் உள்ள ஸ்கோப் கன்வென்ஷன் மையத்தில் நடைபெறவுள்ளது. இதில் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறையின் இணை அமைச்சர் திரு ராவ் இந்திரஜித் சிங், தேசிய புள்ளியியல் ஆணையத்தின் தலைவர் பேராசிரியர் ராஜீவ லக்ஷ்மண் கராந்திகர், புள்ளியியல் துறை செயலாளரும் தலைமைப் புள்ளியியல் தலைவருமான டாக்டர் ஜி.பி. சமந்தா உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்     கள், துறைகள், மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

இந்த தினம் ஆண்டுதோறும் ஒரு  கருப்பொருளின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. அந்த வகையில் நிலையான வளர்ச்சி இலக்குகளை கண்காணிப்பதற்கான மாநிலம் மற்றும் தேசிய காரணி கட்டமைப்பை சீரமைத்தல் என்பதை இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக உள்ளது.

தொழில்நுட்ப அமர்வின் அதிகாரிகள் கருப்பொருளின் அடிப்படையிலான விளக்கங்களை அளிக்கவுள்ளனர். இதைத் தொடர்ந்து புள்ளியியல் நிபுணர்களின் உரைகளும் இடம் பெற உள்ளன.

***

AP/ES/KPG/KRS



(Release ID: 1935840) Visitor Counter : 151