நிலக்கரி அமைச்சகம்
வணிக ரீதியிலான நிலக்கரி சுரங்க ஏலத்தின் 7-ம் சுற்றுக்கு 35 ஏலங்களை நிலக்கரி அமைச்சகம் பெற்றுள்ளது
Posted On:
27 JUN 2023 5:05PM by PIB Chennai
வணிக ரீதியிலான நிலக்கரி சுரங்க ஏலத்தின் ஏழாவது சுற்று மார்ச் 29, 2023 அன்று நிலக்கரி அமைச்சகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட ஆணையத்தால் தொடங்கப்பட்டது. 103 நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏலத்தை சமர்ப்பிப்பதற்கு கடைசி தேதி 2023 ஜூன் 27-ம் தேதியே கடைசிநாள் ஆகும்.
மொத்தம் 18 நிலக்கரி சுரங்கங்களுக்கு இதுவரை 35 ஏலங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் ஏழு சுரங்கங்களுக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஏலங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த ஏல நடைமுறையின் ஒரு பகுதியாக ஆன்லைன் மூலம் பெறப்பட்ட ஏலங்கள் 2023 ஜூன் 28-ம் தேதி அன்று புதுதில்லியில் திறக்கப்படும்.
***
(Release ID: 1935641)
AP/ES/RJ/KRS
(Release ID: 1935703)
Visitor Counter : 137