இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டென்சிங் நார்கே தேசிய சாசக விருது 2022-க்கான விண்ணப்பங்களை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுகள் அமைச்சகம் வரவேற்றுள்ளது

प्रविष्टि तिथि: 26 JUN 2023 4:30PM by PIB Chennai

சாசகத்துடன்  தொடர்புடையவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கவும், இளைஞர்களிடையே கூட்டாக செயல்படும் உணர்வை மேம்படுத்தவும், சவாலான சூழ்நிலைகளில் விரைந்து செயல்படுவதை ஊக்கப்படுத்தவும், மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் அமைச்சகம் டென்சிங் நார்கே தேசிய சாசக விருதினை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக டென்சிங் நார்கே தேசிய சாசக விருது 2022-க்கான விண்ணப்பங்களை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுகள் அமைச்சகம் வரவேற்றுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் https://awards.gov.in என்ற இணையப்பக்கத்தின் மூலம் 2023 ஜூலை 14 வரை வரவேற்கப்படுகின்றன. இந்த விருதுக்கான விதிமுறைகளை  https://yas.nic.in/youth-affairs/inviting-nominations-tenzing-norgay-national-adventure-award-2022-15th-june-2023-14th என்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் அமைச்சகத்தின் இணையதளத்தில் அறியலாம்.

இந்த விருது ரூ.15 லட்சம் ரொக்கப்பரிசையும், வெண்கலச் சிலையையும், சான்றிதழையும் பட்டு அங்கவஸ்திரம் அல்லது புடவையையும் கொண்டது. வழக்கமாக இந்த விருது 4 வகைகளில் வழங்கப்படும். கடந்த 3 ஆண்டுகளாக நிலம், கடல், வான் சாகசங்களுக்கு விருது வழங்கப்படுவதோடு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்படுகிறது.

***

AP/SMB/KPG/KRS


(रिलीज़ आईडी: 1935433) आगंतुक पटल : 210
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Odia , Telugu