பிரதமர் அலுவலகம்
ஜி 20 சுற்றுலா அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய வீடியோ உரையின் தமிழாக்கம்
Posted On:
21 JUN 2023 2:44PM by PIB Chennai
மேன்மைதாங்கியவர்களே, தாய்மார்களே மற்றும் மதிப்பிற்குரியவர்களே, வணக்கம்!
இந்தியாவிற்கு வருகை தந்துள்ள உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்! உலகளவில் இரண்டு டிரில்லியன் டாலருக்கும் மேல் மதிப்புள்ள துறையைக் கையாண்டு கொண்டிருக்கும் சுற்றுலாத்துறை அமைச்சர்களே, உங்களுக்கு சுற்றுலா செல்லும் வாய்ப்பு அரிதாகவே கிடைக்கிறது. இந்தியாவின் முக்கியமான சுற்றுலாத்தலம் என்பதற்காக மட்டும், கோவாவில் ஜி20 சுற்றுலா அமைச்சர்கள் கூட்டம் நடத்தப்படவில்லை, அமைச்சர்கள் இங்கு நடத்தப்படும் ஆலோசனைகளுக்கு இடையே கோவாவின் இயற்கை அழகையும், ஆன்மிக பயணத்தையும் அனுபவிக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.
மேன்மைதாங்கியவர்களே!
நமது பழமையான வேதங்களில் அதிதி தேவோ பவா என்று கூறப்படுகிறது. இதன் அர்த்தம் விருந்தினர்களே கடவுள் என்பதாகும். இதுவே எனது சுற்றுலாத்துறையின் அணுகுமுறை, நமது சுற்றுலா என்பது தலங்களைப் பார்வையிடுவது மட்டுமல்ல. புதுவிதமான அனுபவங்களை அளிப்பதும்கூட. இசை அல்லது உணவு, கலை அல்லது கலாச்சாரம் என எதுவாக இருந்தாலும் இந்தியாவின் பன்முகத்தன்மை உண்மையில் கம்பீரமானது. உயரமான இமயம் முதல் அடர்த்தியான வனப்பகுதி வரை, வறண்ட பாலைவனம் முதல் எழில் மிகுந்த கடற்கரை வரை, சாகச விளையாட்டு முதல் தியானம் வரை, என அனைவருக்கும் இந்தியா ஏதேனும் ஒன்றை வைத்திருக்கிறது. ஜி20 தலைமைத்துவ காலத்தில் சுமார் 200 கூட்டங்களை நாடு முழுவதும் நடத்தப்பட உள்ளன. இந்தக் கூட்டங்களில் மாறுபட்ட அனுபவங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
உலக சுற்றுலாத்துறையில் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதுடன் நம்முடைய தொன்மை வாய்ந்த பாரம்பரியத்தை பாதுகாப்பதை மையப்படுத்தியே இந்தியாவின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன. ஆன்மிக சுற்றுலாவை மேம்படுத்துவது, மத்திய அரசின் இலக்குகளில் ஒன்று. புனித ஆன்மிக நகரமான வாரணாசியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதன் மூலம் அங்கு நாள்தோறும் வருகை தரும் யாத்ரீகர்களின் எண்ணிக்கை 10 மடங்காக அதிகரித்து 70 மில்லியனாக இருக்கிறது. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் புதிய தலங்களை இந்தியா உருவாக்கி வருகிறது. உதாரணமாக குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான சிலையான ஒற்றுமைக்கான சிலை திறக்கப்பட்டது முதல் ஓராண்டிற்குள் 27 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு இருக்கின்றனர். கடந்த 9 ஆண்டுகளில் நாட்டின் சுற்றுலா சூழலை மேம்படுத்த நாங்கள் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். போக்குவரத்து உள்கட்டமைப்பு வசதி, விருந்தோம்பல் துறை, திறன் மேம்பாட்டுத்துறை, விசா வழங்கும் நடைமுறை உட்பட சுற்றுலாத்துறையின் பல பிரிவுகளில் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். மற்ற துறைகளோடு ஒப்பிடும் போது, விருந்தோம்பல் துறையில், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. நிலையான வளர்ச்சி இலக்குகளை விரைவாக அடைய சுற்றுலாத்துறையைப் பொருத்தமானதாக இந்தியா அங்கீரித்திருக்கிறது.
மேன்மைதாங்கியவர்களே!
5 முக்கிய துறைகளான பசுமை சுற்றுலா, டிஜிட்டல் மயமாக்கல், திறன் மேம்பாடு, சுற்றுலாத்துறையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர், சுற்றுலாத்தல மேலாண்மை ஆகியவை இந்தியாவிற்கு மட்டுமல்லாமல் உலகின் தென்பகுதி நாடுகள் அளிக்கும் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் யதார்த்தத்தோடு ஒத்துப்போகும் புத்தாக்கங்கள் உள்ளிட்ட வளரும் தொழில்நுட்பங்களின் சிறந்த பலன்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழிகளிலும், மொழிப்பெயர்ப்பு செய்வதற்கான வசதிகளை செயற்கை நுண்ணறிவு மூலம் மேற்கொள்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசுகள், தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்கள், ஒருங்கிணைந்தால் சுற்றுலாத்துறையில் வேகமாக தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த முடியும்.
மேன்மைதாங்கியவர்களே!
தீவிரவாதம் நம்மைப் பிரிக்கிறது, ஆனால் சுற்றுலா நம்மை இணைக்கிறது. சுற்றுலாத்துறை, மக்களை ஒருங்கிணைக்கும் திறன் படைத்தது. இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் நோக்கமான வசுதைவக் குடும்பகம்- ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்பதே சர்வதேச சுற்றுலாவின் நோக்கமாக உள்ளது.
மேன்மைதாங்கியவர்களே!
திருவிழாக்களின் விளைநிலமாக இந்தியா திகழ்கிறது. நாடு முழுவதும், ஆண்டு முழுவதும் கொண்டாட்டங்கள் கொண்டாடப்பட உள்ளன. கோவாவில் விரைவில், சாவோ ஜாவோ திருவிழா கொண்டாடப்பட உள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஜனநாயகத்தின் தாயான இந்தியாவில் கொண்டாடும் இந்த ஜனநாயக திருவிழாவை வெளிநாட்டு பிரதிநிதிகள், பார்வையிட வேண்டும். சுமார் ஒரு மாதத்திற்கும் மேல் நடைபெறும் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவில், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள கோடிக்கணக்கான மக்கள் வாக்களிப்பதையும் பார்வையிட முடியும். இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான உலகளாவியத் திருவிழாக்களைக் காண நீங்கள் இங்கு பயணம் மேற்கொள்ள வேண்டும்.
நன்றி!
***
(Release ID: 1934012)
SM/ES/RJ/KRS
(Release ID: 1934241)
Visitor Counter : 175
Read this release in:
Gujarati
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam