ஆயுஷ்
azadi ka amrit mahotsav

9-வது சர்வதேச யோகா தினம் 2023 அதிக அளவிலான மக்கள் பங்களிப்புடன் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது

Posted On: 21 JUN 2023 1:01PM by PIB Chennai

9-வது சர்வதேச யோகா தினம் 2023 இந்த ஆண்டு புதிய முன்னெடுப்புகளுடன் மிகப் பெரிய அளவில் அதிக அளவிலான மக்கள் பங்களிப்புடன் உலகம் முழுவதும் வெற்றிகரமாக கொண்டாடப்பட்டது. மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நடைபெற்ற நிகழ்வில், குயடிரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தங்கர் தலைமையில், 15,000-க்கும் மேற்பட்டவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய  திரு ஜக்தீப் தங்கர் நமது பிரதமரின் முயற்சியின் காரணமாக யோகா தற்போது உலகத்திருவிழாவாக கொண்டாடப்படுவது திருப்தி அளிக்கும் விஷயம் என்று கூறினார். யோகா தனிநபருக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மனித சமுதாயத்தினருக்குமானது என்று அவர் தெரிவித்தார். நமது பயிற்சி பெற்ற யோகா ஆசிரியர்கள் உலகம் முழுவதும் பணியாற்றி வருவதாகவும், யோகா ஆசிரியர்களுக்கானத் தேவை அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யோகா தினத்தையொட்டி, மக்களுக்கு வீடியோ மூலம் செய்தி வெளியிட்டுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, யோகா ஆரோக்கியமான வலிமையான சமூகத்தை உருவாக்கி வருவதாகவும், இந்த கூட்டு சக்தி இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதாகவும் கூறினார். மத்தியப்பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் படேல் பேசிய போது இன்றைய இளைய தலைமுறையினருக்கு யோகா மிகவும் அவசியம் என்று தெரிவித்தார். யோகா பயிற்சி மூலம் அவர்கள் எதிர்கால சவால்களை திறமையுடன் எதிர்கொள்ள இயலும் என்று அவர் கூறினார்.

பின்னர் பேசிய  மத்தியப்பிரதேச முதலமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான், பள்ளிகளில் யோகா ஒரு பாடத்திட்டமாக சேர்க்கப்பட்டு மத்தியப்பிரதேசத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இது அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

---- 

SM/IR/KPG/KRS


(Release ID: 1934215) Visitor Counter : 146