பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய கப்பற்படை வீரர்களின் செயல்முறை பயிற்சியை விரிவுபடுத்த கொச்சியில் ‘துருவ்’ எனும் ஒருங்கிணைந்த சிமுலேட்டர் வளாகத்தைப் பாதுகாப்பு அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்
Posted On:
21 JUN 2023 11:33AM by PIB Chennai
கொச்சியில் உள்ள தென் மண்டல கப்பற்படை தளத்தில் ‘துருவ்’ எனும் ஒருங்கிணைந்த சிமுலேட்டர் வளாகத்தைப் பாதுகாப்பு அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் 2023 ஜூன் 21 அன்று தொடங்கி வைத்தார். உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இந்த நவீன சிமுலேட்டர்கள் இந்திய கப்பற்படை வீரர்களின் செயல்முறை பயிற்சியை குறிப்பிடத்தக்க அளவு விரிவுபடுத்தும். இவை கடல்வழி போக்குவரத்து, விமானப்படை செயல்பாடுகள், கப்பற்படை செயல்பாடுகள் ஆகியவற்றில் நிகழ்நேர அனுபவத்தை அளிக்கும்.
இந்தத் தொடக்க நிகழ்வின்போது சிமுலேட்டர்கள் உருவாக்கத்தில் ஈடுபட்ட நிறுவனங்களின் மூத்த பிரதிநிதிகளுடன் திரு.ராஜ் நாத் சிங் கலந்துரையாடினார்.
புதுதில்லியில் உள்ள ஏஆர்ஐ என்ற தனியார் நிறுவனம் தயாரித்துள்ள இந்த சிமுலேட்டர்கள் 18 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதே போல் இன்ஃபோவிஷன் டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனம் இந்திய கப்பற்படைக்கு முதன்முறையாக வான்வழிப் பயண டோம் என்ற சாதனத்தை உருவாக்கியுள்ளது.
***
(Release ID: 1933880)
SM/SMB/RR/KRS
(Release ID: 1934209)
Visitor Counter : 138