ஜல்சக்தி அமைச்சகம்
4-வது தேசிய நீர் விருதுகளை குடியரசு துணைத்தலைவர் 2023, ஜூன் 17 அன்று வழங்குகிறார்
Posted On:
15 JUN 2023 11:40AM by PIB Chennai
மத்திய நீர்வள அமைச்சகத்தின் 4-வது தேசிய நீர் விருதுகளை குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர், 2023, ஜூன் 17 அன்று புதுதில்லியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் வழங்கவுள்ளார். 11 பிரிவுகளில் 4-வது தேசிய நீர் விருதுகளை 41 பேருக்கு நீர்வளத்துறை அறிவித்துள்ளது. விருது பெறும் ஒவ்வொருவருக்கும் சான்றிதழ், கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட உள்ளது.
இவ்விருதுகளில் சிறந்த மாநிலங்களுக்கான முதல் பரிசு மத்தியப் பிரதேசத்திற்கு அளிக்கப்பட உள்ளது. சிறந்த மாவட்டத்திற்கான விருது, ஒடிசா மாநிலம் கன்ஞம் மாவட்டத்திற்கும், சிறந்த கிராமப் பஞ்சாயத்திற்கான விருது தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கூத்தகுடம் மாவட்டத்தில் உள்ள ஜகநாதபுரம் கிராமத்திற்கும், சிறந்த நகர்ப்புற உள்ளாட்சிக்கான விருது சண்டிகர் மாநகராட்சிக்கும் வழங்கப்பட உள்ளது. சிறந்த பள்ளிக்கான விருது குஜராத் மாநிலம் மெஹ்சனாவில் உள்ள ஜாமியத்புரா தொடக்கப்பள்ளிக்கும் அளிக்கப்பட உள்ளது.
4-வது தேசிய நீர் விருதுகளை பெறுவதற்கான அறிவிப்புகள் உள்துறை அமைச்சகத்தின் தேசிய விருது இணையதளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 30 அன்று வெளியிடப்பட்டது. விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாளான 2022, அக்டோபர் 31 வரை மொத்தம் 868 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்களை மத்திய நீர் ஆணையம் மற்றும் மத்திய நிலத்தடி நீர் வாரியம் பரிசீலித்ததில் 11 பிரிவுகளில் 41 பேர் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1932505
***
AD/IR/RS/GK
(Release ID: 1932564)
Visitor Counter : 229