நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
கோதுமையின் விலையைக் குறைப்பதால் நுகர்வோர் பயனடைவதை உறுதி செய்வது தொடர்பாக மாநில அதிகாரிகளுடன் மத்திய உணவு மற்றும் பொது விநியோகச் செயலாளர் ஆலோசனை
Posted On:
13 JUN 2023 4:29PM by PIB Chennai
கோதுமை விலையை கட்டுப்படுத்துவதற்கும், சந்தையில் கோதுமை எளிதாக கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறைச் செயலாளர் திரு சஞ்சீவ் சோப்ரா மாநிலங்களின் உணவுத்துறைச் செயலாளர்களுடன் காணொலி மூலம் இன்று (13.06.2023) ஆலோசனை நடத்தினார். நேற்று (12.06.2023) அறிவிக்கப்பட்ட கோதுமை இருப்பு வரம்பு உத்தரவு மற்றும் அதன் செயலாக்கம் குறித்து இன்றைய கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. மொத்த விற்பனையாளர்கள், வர்த்தகர்கள், சில்லறை விற்பனையாளர்கள், பெரிய சில்லரை வர்த்தக விற்பனையாளர்கள் மற்றும் கோதுமை பதப்படுத்துபவர்களுக்கு கோதுமை கையிருப்புத் தொடர்பான வரம்புகளை மத்திய அரசு நேற்று (12.06.2023) அறிவித்த நிலையில், அது தொடர்பான நடவடிக்கைகளை விரைவுப்படுத்தி, பதுக்கலைத் தடுத்து விலையை கட்டுப்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
வர்த்தகர்களிடம் கோதுமை இருப்பு குறித்த விவரங்களைப் பெறுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் இணையதளமான https://evegoils.nic.in/wsp/login என்ற தளத்தில் தரவுகளை நிரப்புவதற்கான வழிமுறைகள் மாநில அரசுகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன.
கோதுமை கையிருப்பு வரம்புகளுக்கு உட்பட்ட அனைத்து தரப்பினரும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோதுமையின் கையிருப்பு நிலையை இந்த இணையதளத்தில் தவறாமல் அறிவித்து புதுப்பிப்பதை உறுதி செய்யுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டத்தின் போது, கோதுமை மற்றும் அரிசியை உள்நாட்டு திறந்த சந்தை திட்டத்தின் கீழ் (ஓ.எம்.எஸ்.எஸ்-டி) விற்பனை செய்வதற்கான அரசின் முடிவு குறித்தும் மத்திய அரசு விளக்கம் அளித்தது. நுகர்வோருக்கு கோதுமை மற்றும் அரிசி போன்ற உணவு தானியங்கள் குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1931993
***
AP/PLM/RS/GK
(Release ID: 1932084)
Visitor Counter : 188