சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
குஜராத்தில் ‘பிபர்ஜாய்’ புயல் காரணமாக தயார் நிலை நடவடிக்கைகள் பற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆய்வு செய்தார்
प्रविष्टि तिथि:
13 JUN 2023 3:04PM by PIB Chennai
‘பிபர்ஜாய்’ புயல் குறித்து மத்திய அரசும், குஜராத் மாநில அரசும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, குஜராத் சுகாதாரத்துறை அமைச்சர் திரு ருஷிகேஷ் கணேஷ்பாய் படேல் ஆகியோர் குஜராத்தின் புஜ் பகுதியில் ஆய்வு செய்தனர்.
‘பிபர்ஜாய்’ புயல் ஜூன் 15 அன்று குஜராத் கடற்கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புயலை எதிர்கொள்வதற்கான தயார் நிலை ஏற்பாடுகளில் மாநிலங்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்கு குஜராத் உள்ளிட்ட மேற்கு கடலோர மாநிலங்களின் மண்டல அலுவலகங்களுடன் தொடர்ச்சியாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தொடர்புகொண்டுள்ளது.
புயலுக்குப்பின் தொற்றுநோய் ஏற்பட்டால் உடனடியாக கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கு மாநில மற்றும் மாவட்ட அளவிலான கண்காணிப்பு பிரிவுகளுடன் இணைந்து செயல்பட அனைத்து மாநிலங்களிலும் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
புயல் நிலைமையை மத்திய சுகாதார அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. சுகாதாரம் சார்ந்த அவசரத் தேவைகள் இருப்பின் அவற்றை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1931943
***
AP/SMB/AG/GK
(रिलीज़ आईडी: 1931998)
आगंतुक पटल : 189