பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஒடிசா ரயில் விபத்து குறித்து நிலைமையை ஆய்வு செய்ய உயர்மட்டக் கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்றது. நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் ஒடிசா செல்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 03 JUN 2023 1:12PM by PIB Chennai

ஒடிசாவில் ரயில் விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து நிலைமையை ஆய்வு செய்ய நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார். நிலைமையை ஆய்வு செய்ய திரு மோடி ஒடிசா செல்கிறார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு;

“ஒடிசாவில் ரயில் விபத்து ஏற்பட்டதை அடுத்து நிலைமையை ஆய்வு செய்ய நடைபெற்ற கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்கினார். மீட்பு, நிவாரணம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகள் தொடர்பான அம்சங்கள் ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.’’

"பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா செல்கிறார், அங்கு அவர் ரயில் விபத்துக்குப் பிந்தைய நிலைமையை ஆய்வு செய்கிறார்."

***

LG/PKV/SG/DL

 


(வெளியீட்டு அடையாள எண்: 1929620) வருகையாளர் எண்ணிக்கை : 222