பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஏர் மார்ஷல் ராஜேஷ் குமார் ஆனந்த் விமானப்படை நிர்வாகப் பொறுப்பு அதிகாரியாக (ஏஓஏ) பதவியேற்றார்

प्रविष्टि तिथि: 01 JUN 2023 11:42AM by PIB Chennai

விசிஷ்ட் சேவா பதக்கம் பெற்ற ஏர் மார்ஷல் ராஜேஷ் குமார் ஆனந்த், இன்று  விமானப்படை நிர்வாகப் பொறுப்பு  அதிகாரியாக (ஏஓஏ)  பொறுப்பேற்றார். தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவரான இவர், இந்திய விமானப்படையின் நிர்வாகப் பிரிவு அதிகாரியாக 1987 ஜூன் 13 அன்று    நியமிக்கப்பட்டார். விமானப்படை போர்பயிற்சிக் கல்லூரியில் உயர் விமானப்படை அதிகாரி படிப்பையும், சிங்கப்பூர் ஏவியேஷன் அகாடமியில் ஏரியா கன்ட்ரோல் படிப்பையும் இவர் முடித்துள்ளார்.

36 ஆண்டுகளுக்கும் மேலான பணியில், ஏர் மார்ஷல் பல்வேறு களங்கள் மற்றும் நிர்வாகத்தில் பொறுப்பு வகித்துள்ளார்.  தற்போதைய நியமனத்திற்கு முன், புதுதில்லியில் உள்ள விமானப்படை  தலைமையகத்தில் தலைமை இயக்குநராக  (நிர்வாகம்) பணி புரிந்தார்.

அவரது சிறப்பான சேவையைப் பாராட்டி,  அவருக்கு 2022 ஜனவரியில் குடியரசுத் தலைவரால்  விசிஷ்ட் சேவா பதக்கம் வழங்கப்பட்டது.

***

 

SRI/PKV/GK


(रिलीज़ आईडी: 1928997) आगंतुक पटल : 221
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Telugu