மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

மாற்றி அமைக்கப்பட்ட செமிகான் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் குறைக்கடத்திகள் மற்றும் காட்சிப்படுத்தும் சாதனங்களின் உற்பத்தி மையங்களை அமைப்பதற்கான விண்ணப்பங்களை சமர்பிக்கும் தேதி அறிவிப்பு

Posted On: 31 MAY 2023 11:33AM by PIB Chennai

மாற்றி அமைக்கப்பட்ட செமிகான் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் குறைகடத்திகள் உற்பத்தி மையங்களையும், காட்சிப்படுத்தும் சாதனங்களின் உற்பத்தி மையங்களையும் அமைப்பதற்காக ஜூன் 1, 2023 முதல் புதிய விண்ணப்பங்களைக் கோர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் குறைகடத்திகள் மற்றும் காட்சிப்படுத்தும் சாதனங்களின் உற்பத்தி சூழலியலை மேம்படுத்துவதற்காக மாற்றி அமைக்கப்பட்ட செமிகான் இந்தியா திட்டத்தை அமல்படுத்தும் முதன்மை முகமையான இந்திய குறைக்கடத்திகள் இயக்கம் இந்த விண்ணப்பங்களை ஏற்கும்.

மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தின் கீழ் இந்தியாவில் குறைகடத்தி உற்பத்தி மையங்களை அமைப்பதற்காக நிறுவனங்களுக்கு திட்ட செலவில் 50% நிதி உதவி வழங்கப்படும். அதேபோல, காட்சிப்படுத்தும் சாதனங்களின் குறிப்பிட்ட தொழில்நுட்பங்களின் உற்பத்தி மையங்களை அமைப்பதற்காக திட்ட செலவில் 50% நிதி உதவி அளிக்கப்படும்.

விண்ணப்ப சாளரத்தை பயன்படுத்தி டிசம்பர் 2024 வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். வடிவமைப்பு சார்ந்த ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 26 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றில் 5 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய குறைக்கடத்தி இயக்கத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இந்தியாவில் குறைக்கடத்திகள் மற்றும் காட்சிப்படுத்தும் சாதனங்களின் உற்பத்திச் சூழலியலை மேம்படுத்துவதற்காக கடந்த 2021, டிசம்பர் மாதத்தில் செமிகான் இந்தியா திட்டத்தை ரூ. 76,000 கோடி செலவில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.  குறைக்கடத்திகள் மற்றும் காட்சிப்படுத்தும் சாதனங்களின் உற்பத்தி மையங்களை அமைப்பதற்கான முந்தைய திட்டங்களுக்கு விண்ணப்பித்தவர்கள், தகுந்த திருத்தங்களை மேற்கொண்ட பிறகு மாற்றியமைக்கப்பட்ட திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

(Release ID: 1928479)

******

AP/RB/KRS



(Release ID: 1928787) Visitor Counter : 182