சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 5 கோடி பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை
Posted On:
31 MAY 2023 3:04PM by PIB Chennai
பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் வெற்றிகரமாக 5 கோடி பேருக்கு மருத்துவமனைகளில் ரூ.61,501 கோடி மதிப்பிலான சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. இது இந்தத் திட்டத்தின் மைல்கல் சாதனையாக கருதப்படுகிறது. தேசிய சுகாதார ஆணையத்தின் சார்பில் அமல்படுத்தப்பட்ட சிறப்புமிக்க இந்தத் திட்டத்தின் கீழ் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான சுகாதாரக் காப்பீடு வழங்கப்படுகிறது.
இந்த சாதனை குறித்து தேசிய சுகாதார ஆணையத்தின் முதன்மை செயல் அதிகாரி கூறுகையில், உலகளாவிய சுகாதாரக் காப்பீட்டு இலக்கை அடைய ஏதுவாக பிரதமரின் ஆயுஷ்மான் பாரத்-மக்கள் ஆரோக்கியத் திட்டம் கடந்த ஐந்து ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார். ஏழை மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் பல குடும்பங்களின் மருத்துவச் சிகிச்சைக்கான செலவை குறைத்திருப்பதாகவும் தெரிவித்தார். நடப்பாண்டு 9.28 கோடி பேருக்கு ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். புதுதில்லி, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் தவிர பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 23.39 கோடி பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் அட்டை வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்தத் திட்டத்தின் கீழ் புற்றுநோய், சிறுநீரகம் சார்ந்த நோய்கள் போன்றவற்றிக்கான சிகிச்சையுடன், எலும்பு சார்ந்த சிகிச்சைகள், அவசரகால சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
******
AP/ES/MA/KRS
(Release ID: 1928742)
Visitor Counter : 191