பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பப்புவா நியூ கினியாவில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அறிஞர்களுடன் பிரதமரின் உரை

Posted On: 22 MAY 2023 2:14PM by PIB Chennai

இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு கூட்டாண்மைக்கான  மூன்றாவது மாநாட்டில் கலந்துகொள்வதற்காக  2023, மே 22 அன்று போர்ட் மோர்ஸ்பை சென்ற  பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அறிஞர்களுடன்  உரையாற்றினார். இவர்கள் இந்திய தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பின் கீழ், இந்தியாவில் பயிற்சி பெற்ற அரசு உயரதிகாரிகள், முன்னணி தொழில் அதிபர்கள் மற்றும்  சமூதாயகத் தலைவர்கள் ஆவர். அவர்கள் இந்தியாவில் பெற்ற திறன்களை பயன்படுத்தி அவர்களுடைய சமூகத்திற்கு பங்களிப்பு செய்கிறார்கள்.

 

பயிற்சி பெற்றவர்களின் தனிப்பட்ட வெற்றி மற்றும் சாதனைக்காக  அவர்களைப் பிரதமர் மோடி பாராட்டினார். மற்ற நாடுகளின் சிறந்த நிர்வாகம், பருவநிலை மாற்றம், பொதுமக்கள் பயன்படுத்தும் மின்னணு சாதனங்கள் மற்றும் நீடித்த வேளாண்மை போன்றவற்றில் அவர்களுடைய நோக்கத்தை  அடைவதற்கு இந்தியாவின் திறன் மேம்பாட்டு முன்னெடுப்பு மூலம், மேற்கொள்ளப்பட்ட முக்கிய பங்களிப்பை அவர் எடுத்துரைத்தார். அதுபோன்ற திறன் மேம்பாட்டின் முயற்சிகளில் இந்தியாவின் ஆதரவை அவர் உறுதிப்படுத்தினார்.  கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற  இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக் கூட்டமைப்பு மாநாட்டிற்கு பிறகு, இப்பகுதியில் உள்ள அனைத்து நாடுகளையும் சேர்ந்த சுமார் 1000 அதிகாரிகளுக்கு இந்தியா பயிற்சி அளித்துள்ளது. வேளாண்மை மற்றும் அது தொடர்புடைய துறைகளில் உதவி செய்வதற்காக  இந்நாடுகளுக்கு  இந்தியா, நீண்ட கால அடிப்படையில் நிபுணர்களை அனுப்பியுள்ளது.

******

(Release ID: 1926260)

AP/IR/RS/KRS


(Release ID: 1926321) Visitor Counter : 168