சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

சர்வதேச உயர் இரத்த அழுத்தம் தினம்

Posted On: 17 MAY 2023 2:32PM by PIB Chennai

சர்வதேச உயர் இரத்த அழுத்த தினத்தைக் குறிக்கும் வகையில், 2025-ம் ஆண்டுக்குள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஏழரை கோடி மக்களுக்குப் பரிசோதனை மற்றும் தரமான சிகிச்சை அளிக்கும் முயற்சியை மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடாக மாற உறுதி பூண்டுள்ளதாகவும், இந்த இலக்கை அடைய, ஆயுட்காலம், மகப்பேறு இறப்பு விகிதம், பரவா நோய்கள் உள்ளிட்டவற்றில் வளர்ந்த நாடுகளுக்கு இணையான நிலையை அடைய இந்தியா முயற்சித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி செய்தல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டுமென டாக்டர் பால் அறிவுறுத்தினார். "ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்" என்ற உணர்வில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

இந்த அற்புதமான முயற்சிக்காக இந்தியாவைப் பாராட்டிய உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம், உயர் இரத்த அழுத்தம் உள்ள ஏழரை கோடி மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற இந்திய அரசின் இலக்கானது, சர்வதேச அளவில் பரவா நோய்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் எண்ணிக்கையில் மிகப்பெரியது என்றார். மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு.ராஜேஷ் பூஷன், மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் திரு.விஷால் சௌஹான் உள்பட மத்திய அரசின் பல மூத்த அதிகாரிகளும், உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதிகள் பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

(Release ID : 1924730)

******

AP/CR/KRS



(Release ID: 1924949) Visitor Counter : 166