சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

திரு பூபேந்திர யாதவ் 'எனது வாழ்க்கை' செயலியை அறிமுகம் செய்தார்

Posted On: 15 MAY 2023 12:49PM by PIB Chennai

சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்வியல் இயக்கமான லைஃப் மிஷன் இயக்கத்தின் மேம்பாட்டுப் பணிகளை அடையாளம் காண உதவும் வகையிலான மேரிலைஃப் (Meri LiFE) என்ற செயலியை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடுத்துறை அமைச்சர் திரு பூபேந்திர யாதவ் அறிமுகம் செய்து வைத்தார். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப்பார்வையில் இடம்பெற்ற சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்வியல் முறையை உத்வேகப்படுத்தும்  வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு பூபேந்திர யாதவ், ஒட்டுமொத்த இந்திய குடிமக்களின் வல்லமையை குறிப்பாக, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் இளைஞர்களின் நடவடிக்கையை இந்த செயலி வெளிப்படுத்தும் என்றார். இந்த செயலி மூலம் அன்றாட வாழ்வில் மேற்கொள்ளும் சுற்றுச்சூழலுக்கேற்ற நடவடிக்கைகள், பருவநிலை மாறுபாட்டில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டார். இந்த மேரிலைஃப் என்ற இணையதளமும், செயலியும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்வியல் முறைக்கான தேசிய இயக்கத்தின்  ஒருங்கிணைந்து செயல்படும் என்று கூறினார்.

கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த லைஃப் எனப்படும் தேசிய இயக்கத்தை பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கிவைத்ததை சுட்டிக்காட்டிய அமைச்சர், தனி மனிதர்களின் செயல்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாப்பதே இந்த இயக்கத்தின் குறிக்கோள் என்றும்  தெரிவித்தார்.

இந்த இயக்கத்தின் சார்பில் மிகப்பெரிய அளவில் மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சைக்கிள் பேரணி, மாரத்தான், பிளாஷ்டிக் பொருட்கள் சேகரிப்பு உள்ளிட்டவை இந்த மேரிலைஃப் செயலி மற்றும் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அவர் குறிப்பிட்டார். 10 நாட்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட லைஃப் சார்ந்த நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு இருப்பதாகவும், இதில் 17 லட்சம் பேர் பங்கெடுத்து இருப்பதையும் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாட்டுத்துறை அமைச்சர் திரு பூபேந்திர யாதவ் நினைவுகூர்ந்தார்.

இந்த சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்வியல் முறையான லைஃப் இயக்கத்தின் இணையதளத்தில். சூற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான அம்சங்களை உள்ளடக்கிய படைப்புகள். வீடியோக்கள் உள்ளிட்டவை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

******

AP/ES/RS/KGP



(Release ID: 1924176) Visitor Counter : 197