இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் ஒலிம்பிக் பதக்க இலக்கு திட்டத்தில் அட்டானு தாஸ், மெகுலி கோஷ் ஆகியோர் மீண்டும் சேர்க்கப்பட்டனர்
प्रविष्टि तिथि:
11 MAY 2023 1:08PM by PIB Chennai
நடப்பாண்டு அன்டாலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை போட்டி மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதை அடுத்து ஒலிம்பிக் வில்வித்தை வீரரும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவருமான அட்டானு தாஸ், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் ஒலிம்பிக் பதக்க இலக்கு திட்டத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். ஆடவர் ரிகர்வ் தனிநபர் தரவரிசை பிரிவில் 673 புள்ளிகளுடன் 4-ம் இடத்தை பெற்று சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச போட்டிகளுக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.
நடப்பாண்டு நடைபெற்ற தேசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் வெற்றி பெற்ற மெகுலி கோஷ் நடப்பாண்டு கெய்ரோவில் நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற திலோத்தமா சென் ஆகியோரும் ஒலிம்பிக் பதக்க இலக்கு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
***
SRI/IR/AG/KPG
(रिलीज़ आईडी: 1923418)
आगंतुक पटल : 192