ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டின் 50% கிராமங்களில் திறந்தவெளியில் மலம் கழிக்காத நிலை


தமிழ்நாட்டில் 97.8% கிராமங்களில் முறையான கழிவறை வசதிகள்

Posted On: 10 MAY 2023 12:57PM by PIB Chennai

இரண்டாவது கட்ட கிராமப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் திறந்தவெளியில் மலம் கழிக்காத நிலையை நாட்டின் 50% கிராமங்கள் எட்டியுள்ளன. தமிழ்நாட்டில் 97.8% கிராமங்கள் இந்த நிலையை அடைந்துள்ளன. தெலங்கானாவின் அனைத்து கிராமங்களும், கர்நாடகாவில் 99.5% கிராமங்களும், உத்தரப் பிரதேசத்தில் 95.2%  கிராமங்களும் திறந்தவெளியில் மலம் கழிக்காத நிலைக்கு முன்னேறியுள்ளன. 

யூனியன் பிரதேசங்களைப் பொருத்தவரை அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாத்ரா நாகர் ஹவேலி, டாமன் டையு மற்றும் லட்சத்தீவுகள் ஆகியவை 100% இலக்கை எட்டியுள்ளன. இந்த மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் சிறப்பாக செயல்பட்டு போற்றத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருப்பதோடு, இவற்றின் முயற்சிகள், தேசிய அளவில் 50% கிராமங்கள் என்ற இலக்கை அடைவதற்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளன.

இந்த கிராமங்களில் திறந்த வெளியில் மலம் கழிக்காத நிலை ஏற்படுத்தப்பட்டிருப்பதோடு, திட அல்லது திரவக் கழிவு மேலாண்மை அமைப்புமுறையும் அமல்படுத்தப்படுகின்றது. இதுவரை 2.96 லட்சம் கிராமங்கள் இந்த நிலையை எட்டியுள்ளதன் மூலம் 2024-25-க்குள் இரண்டாவது கட்ட கிராமப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் லட்சியங்களை அடையும் உத்வேகம் கிடைத்துள்ளது.

2014-15 முதல் 2021-22 வரை கிராமப்புற தூய்மை இந்தியா இயக்கத்திற்காக மத்திய அரசு ரூ. 83,938 கோடியை ஒதுக்கியது. 2023-24இல் இந்த இயக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 52,137 கோடியாகும். இது தவிர 15-வது நிதிக் குழுவின் ஒதுக்கீட்டுத் தொகையும் இந்த இயக்கத்திற்கு வழங்கப்படுவது, குறிப்பிடத்தக்கது.

 -----

AD/BR/KPG

 

 


(Release ID: 1923092) Visitor Counter : 254