கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முதலாவது இந்திய சரக்கு கப்பலை சித்வே துறைமுகத்தில் திரு சர்பானந்த சோனோவால் வரவேற்றார்

Posted On: 09 MAY 2023 2:59PM by PIB Chennai

மியன்மரின் ரக்கினேவில் சித்வே துறைமுகத்தை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வளம் மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் மியன்மர் குடியரசின் துணைப் பிரதமரும், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சருமான அட்மிரல் டின் ஆங் சேன் ஆகியோர் இன்று கூட்டாக திறந்துவைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கொல்கத்தாவில், ஷியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தி்ல் இருந்து கொடியசைத்து தொடங்கிவைக்கப்பட்ட  முதலாவது இந்திய சரக்கு கப்பலை அவர்கள் வரவேற்றனர்.

சித்வே துறைமுக நடவடிக்கைகள் மூலம் இருதரப்பு மற்றும் பிராந்திய வர்த்தகம் மேம்படுவதுடன் மியான்மரின் ரக்கினேவின் உள்ளூர் பொருளாதாரத்திற்கும் பங்களிப்பு கிடைக்கும். இந்த துறைமுகத்தின்  போக்குவரத்தின் மூலம் இப்பகுதியில் வேலைவாய்ப்பு  ஏற்படுவதுடன் அப்பகுதியின் வளர்ச்சியும் மேம்படும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் இந்தியா-மியான்மர் இடையே உள்ள நெருங்கிய வரலாற்று, கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகள் குறித்து எடுத்துரைத்தார். சித்வே துறைமுகம் போன்ற வளர்ச்சி முன்னெடுப்புகள் மூலம் மியான்மர் மக்களின் வளமை மற்றும் வளர்ச்சியையொட்டிய இந்தியாவின் நீண்டகால நோக்கம் குறித்து அவர் குறிப்பிட்டார்.

 

***

SM/IR/AG/KPG

 


(Release ID: 1922843) Visitor Counter : 190