பிரதமர் அலுவலகம்
மகாராணா பிரதாப் பிறந்தநாளையொட்டி அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
09 MAY 2023 8:53AM by PIB Chennai
மகாராணா பிரதாப், துணிச்சல், தைரியம், பெருமையின் அடையாளம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். மகாராணா பிரதாப்பின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ள பிரதமர், தாய்நாட்டிற்காக அவர் தமது வாழ்க்கையை அர்ப்பணித்ததாகவும், அவருடைய வாழ்க்கை முறை எதிர்கால தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கக்கூடியது என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் டிவிட்டரில் கூறியிருப்பதாவது:
“துணிச்சல், தைரியம், சுயமரியாதையின் அடையாளமாகத் திகழ்ந்த மகாராணா பிரதாப்புக்கு அவருடைய பிறந்த தினத்தில் மரியாதையுடன் கூடிய அஞ்சலி. தாய்நாட்டிற்காக தமது வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்த அவரது செயல் அனைத்து தலைமுறையினருக்கும் உத்வேகம் அளிக்கும்.”
***
AD/IR/AG/RR
(வெளியீட்டு அடையாள எண்: 1922763)
வருகையாளர் எண்ணிக்கை : 204
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam