வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா - அமெரிக்கா இடையேயான கூட்டாண்மை 21-ம் நூற்றாண்டின் சிறப்பான தருணம்: திரு கோயல்

Posted On: 04 MAY 2023 4:45PM by PIB Chennai

இந்தியா - அமெரிக்கா இடையேயான கூட்டாண்மை 21-ம் நூற்றாண்டின் சிறப்பான தருணம் என்றும், நாம் ஒருங்கிணைந்து முன்னோக்கி செல்வோம் என்பது கூட்டாண்மையின் ஆழமான வடிவம் என்றும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, ஜவுளிகள் மற்றும் நுகர்வோர்கள் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

புதுதில்லியில் இன்று நடைபெற்ற அமெரிக்கா - இந்தியா கூட்டாண்மை தொடர்பான ஆண்டுக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். பரஸ்பரம் இரு நாடுகளின் வளர்ச்சி மற்றும் வளமைக்காக ஆழமான மற்றும் பல்வகையிலான இந்தியா-அமெரிக்க வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகள் குறித்து அவர் பேசினார்.

கடந்த 2 ஆண்டுகளில் இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தகம் அதிகரித்துள்ளதாகவும், இதை மேலும் பலமடங்கு அதிகரிக்க நோக்கம் கொண்டுள்ளதாகவும் திரு கோயல் குறிப்பிட்டார். ஆப்பிரிக்கா மற்றும்  தென்கிழக்கு ஆசிய சந்தைகளுக்காக இந்தியாவில் அமெரிக்க நிறுவனங்களை அமைக்குமாறு அவர் தெரிவித்தார். இந்தியாவில் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மைத் திறமை, உலக நாடுகளுடன் இந்தியாவின் உறவை வலுப்படுத்துவதாக அவர் கூறினார்.  

உலகளவில் உற்பத்தி கேந்திரமாக இந்தியாவை மாற்றுவதற்கு கடந்த 9 ஆண்டுகளில் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திரு பியூஷ் கோயல் குறிப்பிட்டார்.

 

***

AD/IR/RJ/KPG


(Release ID: 1922013)