உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா இன்று மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 'மனதின் குரல்' நிகழ்ச்சியின் 100வது அத்தியாயத்தைக் கேட்டார்
प्रविष्टि तिथि:
30 APR 2023 3:32PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் 'மனதின் குரல்' நிகழ்ச்சி இன்று 100 அத்தியாயங்களை நிறைவு செய்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா இன்று மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 'மனதின் குரல்' நிகழ்ச்சியின் 100வது அத்தியாயத்தைக் கேட்டார்.
மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம், பிரதமர் திரு நரேந்திர மோடி சாதனையாளர்களை பாராட்டுவது, இளம் தலைமுறையினருக்கு தேசத்தின் எதிர்காலத்தை கட்டமைக்கவும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவும் உத்வேகம் அளித்துள்ளது என்று திரு அமித் ஷா கூறினார்.
'மனதின் குரல்' மூலம், பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டின் மூலை முடுக்குகளிலும் மக்களுக்கும் அரசுக்கும் இடையே பாலம் அமைக்கும் விதத்தில் செய்திகளைத் தருகிறார்
பல்வேறு பிராந்தியங்கள், மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகள் பற்றிய உரையாடல்களை மேடையேற்றுவதன் மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி இந்தியாவின் சமூக ஜனநாயகத்தை வலுப்படுத்தியுள்ளார் என அமித்ஷா குறிப்பிட்டார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் 'மனதின் குரல்' நிகழ்ச்சி இன்று 100 அத்தியாயங்களை நிறைவு செய்துள்ளதாக ட்விட்டரில் திரு அமித் ஷா பதிவு செய்துள்ளார். மும்பையில் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100வது அத்தியாயத்தைக் கேட்டேன். பிரதமர் திரு நரேந்திர மோடி சாதனையாளர்களை பாராட்டுவது, இளம் தலைமுறையினருக்கு தேசத்தின் எதிர்காலத்தை கட்டமைக்கவும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவும் உத்வேகம் அளித்துள்ளது என்று கூறியுள்ளார்.
***
AP/CJL/DL
(रिलीज़ आईडी: 1920950)
आगंतुक पटल : 225