தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
'மனதின் குரல்' இந்தியாவை இணைக்கிறது
இந்திய ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பு கல்வி நிறுவனம் (IIMC), புது தில்லி நடத்திய சிறப்பு ஆய்வில் 76% ஊடகவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
63% பேர் யூடியூபில் 'மனதின் குரல்' கேட்க விரும்புகிறார்கள்
40% மக்களுக்கு, இந்த நிகழ்ச்சியில் 'கல்வி' மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் கருப்பொருளாக உள்ளது என தெரிவிக்கின்றனர்.
பிரதமரின் வானொலி உரையாடல் நிகழ்ச்சி, 'நவீன பாரதத்தைக் கட்டியெழுப்பும் அறியப்படாத மனிதர்களை ' முழு தேசத்திற்கும் அறிமுகப்படுத்துகிறது
Posted On:
29 APR 2023 12:19PM by PIB Chennai
இந்திய ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பு கல்வி நிறுவனம் (IIMC) நடத்திய சிறப்பு ஆய்வில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் பிரபலமான வானொலி நிகழ்ச்சியான 'மனதின் குரல்' உண்மையான பாரதத்தை நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றுகிறது என்று 76% இந்திய ஊடகவியலாளர்கள் நம்புகின்றனர். இந்த நிகழ்ச்சி நாட்டின் பிற பகுதிகளில் உள்ள விஷயங்களைப் பற்றி மக்கள் இப்போது அதிகம் அறிந்து கொள்ளும் போக்கை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் அதனைப் பாராட்டவும் தொடங்கியுள்ளனர். பதிலளித்தவர்களில் 75% பேர், இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உறுதி செய்வதற்காக தன்னலமின்றி உழைக்கும் அடித்தட்டு மக்களைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தும் ஒரு தளமாக 'மனதின் குரல்' உருவெடுத்துள்ளதாகக் கருதுகின்றனர்.
இந்திய ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பு கல்வி நிறுவன (IIMC) தலைமை இயக்குநர் பேராசிரியர் சஞ்சய் திவிவேதியின் கூற்றுப்படி, ஏப்ரல் 12 மற்றும் 25, 2023 க்கு இடையில் நிறுவனத்தின் வெளிவட்டாரங்கள் தொடர்புத் துறையால் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் உள்ள 116 ஊடக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில், ஊடகவியலாளர்கள், ஊடக ஆசிரியர்கள், ஊடக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஊடக மாணவர்களுடன் தொடர்புடைய மொத்தம் 890 பேர் ஆய்வில் பங்கேற்றனர். இவர்களில் பெண்கள் 326 பேரும் ஆண்கள் 564 பேரும் உள்ளனர். பதிலளித்தவர்களில் 66% பேர் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள்.
பதிலளித்தவர்களின் கூற்றுப்படி, 'நாட்டைப் பற்றிய அறிவு' மற்றும் 'நாட்டைப் பற்றிய பிரதமரின் பார்வை' ஆகிய இரண்டு முக்கியக் காரணங்களாக நிகழ்ச்சியைக் கேட்க வேண்டுமென்ற ஆர்வம் ஏற்படுகிறது. பதிலளித்தவர்களிடம் அவர்கள் எப்படி கேட்கிறார்கள் என்று கேட்டபோது, ஏதேனும் ஒரு நிகழ்ச்சியைத் தவறவிட்டால், 63% பேர் மற்ற ஊடகங்களை விட யூடியூபில் விரும்பிக் கேட்பதாகக் கூறினர். பதிலளித்தவர்களில் 76% பேர் 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் பல்வேறு விஷயங்களைக் கேட்பதன் மூலம் ஜனநாயக செயல்பாட்டில் பங்கேற்பதாக உணர்கிறார்கள்.
'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் விவாதித்த எந்தப் பிரச்சினை மக்களை அதிகம் பாதித்தது என்பதையும் இந்த ஆய்வு புரிந்து கொள்ள முயற்சித்ததாக பேராசிரியர் திவிவேதி சுட்டிக் காட்டியுள்ளார். பதிலளித்தவர்களில் 40% பேர் 'கல்வி' என்று குறிப்பிட்டுள்ளனர். அதே நேரத்தில் 26% பேர் 'அடித்தட்டு மக்களின் சாதனைகள் பற்றிய தகவல்' மிகவும் செல்வாக்கு மிக்க தலைப்பு என்று கூறியுள்ளனர்.
'மனதின் குரல்' நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்ட தலைப்புகள் பற்றிய தகவல்களை மக்கள் யாருடன் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவும் ஆய்வு முயற்சித்தது. 32% பதிலளித்தவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்ட பிரச்சினைகள் குறித்த தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதாகக் கூறியுள்ளனர். 29% பேர் தங்கள் நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் தலைப்புகளைப் பற்றி விவாதிப்பதாகக் கூறினர். ஆய்வில் வெளிப்பட்ட மற்றொரு சுவாரஸ்யமான உண்மை, 12% பேர் வானொலியையும், 15% தொலைக்காட்சிகளையும், 37% பேர் இணைய அடிப்படையிலான தளங்களையும் 'மனதின் குரல்' கேட்க பயன்படுத்துகின்றனர்.
***
AP/CJL/DL
(Release ID: 1920736)
Visitor Counter : 223