ஆயுஷ்
azadi ka amrit mahotsav

ஆயுர்வதே மருத்துவம் மீது விசுவாசத்தை உருவாக்கும் கருவியாக “மன் கி பாத்” உரையாடல் பயன்பட்டது: திரு சர்பானந்த சோனோவால்

Posted On: 28 APR 2023 3:13PM by PIB Chennai

ஆயுர்வேதத் துறையில் மன் கி பாத் ஏற்படுத்திய தாக்கங்கள் என்ற மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் சிறப்பு ஆய்வு பதிப்பை மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டது. இதனை மத்திய ஆயுஷ், துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் வெளியிட்டார்.

விழாவில் பேசிய சோனோவால், ஆயுர்வேத மருத்துவம் மீது மக்களிடையே நம்பிக்கையை உருவாக்குவதற்கு பிரதமரின் மனதின் குரல் உரையாடல் கருவியாகப் பயன்பட்டதாக கூறினார். இந்த வானொலி நிகழ்ச்சி சமூகத்தின் பல்வேறு பிரிவை சேர்ந்த மக்களிடையே ஆயுர்வேத மருத்துவத்தின் மாண்பை கொண்டு சேர்த்தது என்றார்.

இன்று வெளியிடப்பட்ட இந்த பதிப்பு, ஆயுர்வேத மருத்துவத்துறை குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் பல்வேறு எண்ணங்களை உத்வேகமாகக் கொண்டு உருவாகியிருக்கிறது என்று குறிப்பிட்ட சோனோவால், பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியில் 37-வது அத்தியாயத்தில் ஆயுர்வேத மருத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டிருப்பதை நினைவுகூர்ந்தார். சுகாதாரமான வாழ்க்கை முறை, யோகாப் பயிற்சி ஆகியவற்றுடன் ஆதாரங்களைக் கொண்ட ஆயுர்வேத மருத்துவத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்ததாகவும், இதனால் ஆயுர்வேதம் மருத்துவத்துறை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்ததுடன் இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளிலும் ஆயுர்வேத மருத்துவம் பிரபலமடைந்ததாகவும் கூறினார்.

கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி ஆயுர்வேத மருத்துவத்துறை குறித்து வெளியிட்ட கருத்துக்களும், நாட்டின் தேசிய சுகாதாரக் கொள்கையின் அடிப்படைத் தூணாக ஆயுர்வேத மருத்துவம் மாறியிருப்பது குறித்து மனதின் குரல் நிகழ்ச்சி ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றியும் இந்தப் பதிப்பில் இடம்பெற்றிருப்பதாகவும் மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் தெரிவித்தார்.

***

AD/ES/RJ/KRS


(Release ID: 1920545) Visitor Counter : 167