நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
நடப்பு ரபி சந்தைப்பருவத்தில் இதுவரை 195 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது, இது 2022-23-ம் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட கொள்முதல் அளவை கடந்தது
Posted On:
27 APR 2023 3:25PM by PIB Chennai
நடப்பு 2023-24ம் நிதியாண்டின் ரபி சந்தைப் பருவத்தில் கோதுமை கொள்முதல் அளவு 2022-23-ம் நிதியாண்டின் ரபி சந்தைப்பருவத்தின் மொத்த கொள்முதல் அளவை ஏற்கனவே கடந்து விட்டது.
2022-23 ம் நிதியாண்டின் ரபி சந்தைப்பருவத்தில் கொள்முதல் அளவு 188 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தது. எனினும், 2023- 24-ம் நிதியாண்டில் ஏப்ரல் 26, 2023 வரை 195 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் பெரும் பயனடைந்தனர். குறைந்த பட்ச ஆதார விலையாக 14.96 லட்சம் விவசாயிகளுக்கு 41,148 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
அதிகபட்சமாக பஞ்சாப் மாநிலத்தில் 89.79 லட்சம் மெட்ரிக் டன், ஹரியானாவில் 54.26 லட்சம் மெட்ரிக் டன், மத்தியப் பிரதேசத்தில் 49.47 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு கோதுமை கொள்முதல் செய்யப்பட்டது.
***
AP/IR/RS/KRS
(Release ID: 1920219)
Visitor Counter : 163