பிரதமர் அலுவலகம்

கொவிட்-19 தொடர்பான பொது சுகாதார நடவடிக்கை குறித்த உயர்மட்ட குழுக் கூட்டத்திற்கு பிரதமரின் முதன்மை செயலர் டாக்டர் பி.கே. மிஸ்ரா தலைமையேற்பு

Posted On: 19 APR 2023 6:15PM by PIB Chennai

சமீபகாலமாக இந்தியா முழுவதும் கொவிட்-19 தொற்று அதிகரித்து வரும் நிலையில், சுகாதார உள்கட்டமைப்பு, மருந்துகள் மற்றும் இதர முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த உயர்மட்டக் குழுக் கூட்டத்திற்கு பிரதமரின் முதன்மை செயலர் டாக்டர் பி.கே. மிஸ்ரா தலைமையேற்றார்.

உயர்மட்டக் குழுக் கூட்டத்தில், சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத்துறை செயலர் திரு ராஜேஷ் பூஷன் பேசுகையில், போது, உலகளவில் கொவிட்-19 தொற்றுநோயின் தாக்கம் குறித்து விரிவாக பேசினார். மேலும் கேரளா, புதுதில்லி, மகாராஷ்டிரா, அரியானா, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் நோயின் தாக்கம் அதிகரித்து வருவது குறித்தும் அவர் கூறினார்.

இறுதியாக பேசிய டாக்டர் பி.கே.மிஸ்ரா, துணை மாவட்ட அளவில் போதுமான சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள் மிக அத்தியாவசியமாகும் என்றார். மேலும் பரிசோதனை-கண்டறிதல்-சிகிச்சை-தடுப்பு மற்றும் கொவிட்டுக்குப் பிந்தைய வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்தல்  தொடர்பான 5 கட்ட முதன்மை நடவடிக்கைகள் கண்டிப்பாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார். கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளை டாக்டர் பி.கே.மிஸ்ரா கேட்டுக்கொண்டார்.

***

 

(Release ID: 1917985)

AP/GS/RJ/KRS



(Release ID: 1918507) Visitor Counter : 102