தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
2023 பிப்ரவரியில் இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் 16.03 லட்சம் புதிய தொழிலாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்
Posted On:
18 APR 2023 11:13AM by PIB Chennai
தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தால் வெளியிடப்பட்ட தற்காலிக சம்பளப் பட்டியல் தரவுகளின்படி, 2023 பிப்ரவரியில் இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் 16.03 லட்சம் புதிய தொழிலாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், 2023 பிப்ரவரி மாதத்தில் சுமார் 11,000 புதிய தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த தரவுகள் தெரிவிக்கின்றன.
புதிதாக பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் பெரும்பாலான தொழிலாளர்கள் 25 வயது பிரிவினராக இருந்தனர். இம்மாதத்தில் மொத்தம் சேர்க்கப்பட்ட தொழிலாளர்களில் 46% அதாவது 7.42 லட்சம் தொழிலாளர்கள் இந்த வயது உடையவர்கள் ஆவர். நாட்டில் இளைஞர்கள் சிறந்த வேலைவாய்ப்பை பெறுகிறார்கள் என்பதை இது காட்டுகிறது.
2023 பிப்ரவரி மாத சம்பளப் பட்டியலின் பாலின ரீதியான பகுப்பாய்வின்படி இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் 3.12 லட்சம் பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 2023 பிப்ரவரி மாதத்தில் இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் மொத்தம் 49 மாறிய பாலின தொழிலாளர்கள் இருப்பதை புள்ளிவிவரம் காட்டுகிறது. தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்க உறுதிபூண்டிருப்பதை இது காட்டுகிறது.
புள்ளி விவர உருவாக்கம் தொடர் நடவடிக்கை என்பதால் இந்த சம்பளப் பட்டியல் தரவு தற்காலிகமானதாகும்.
***
(Release ID: 1917513)
AP/SMB/MA/KRS
(Release ID: 1917576)
Visitor Counter : 224