திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
தொழில் துறை பயிற்சி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு அளிக்கும் திறன்பாடத் திட்டத்தின் டிஜிட்டல் பதிப்பை திரு தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்
Posted On:
11 APR 2023 3:58PM by PIB Chennai
தொழில் துறை பயிற்சி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு அளிக்கும் திறன்பாடத் திட்டத்தின் டிஜிட்டல் பதிப்பை மத்திய கல்வி, திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று புதுதில்லியில் வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு பிரதான், வேலைவாய்ப்பை அதிகரிப்பதில், இந்தியாவின் எதிர்காலத்தை முறைப்படுத்துவதில், பணியாளர்களை 21-ம் நூற்றாண்டுக்கு தயார்ப்படுத்துவதில் மாற்றத்தை ஏற்படுத்தும் திறன் சக்தி பற்றி எடுத்துரைத்தார். அதிவேகமாக மாறிவரும் பணியிடத்தன்மை கொண்ட தொழில்நுட்ப சகாப்தத்தில் நமது மக்களின் உண்மையான ஆற்றலை வெளிக்கொண்டு வரும் திறவுகோலாக திறன் மேம்பாடு இருக்கும் என்று அவர் கூறினார்.
எங்கேயும், எப்போதும் கற்றலின் தேவையை பூர்த்திச் செய்யும் நோக்கம் கொண்ட இந்த டிஜிட்டல் பதிப்பு மத்திய அரசின் பாரத் திறன் இணையப்பக்கம் மற்றும் இதர வலைதளங்கள் மூலம், 2.5 மில்லியனுக்கும் அதிகமாக மாணவர்களுக்கு கிடைக்கும்.
***
AP/SMB/RS/KPG
(Release ID: 1915672)
Visitor Counter : 192