பிரதமர் அலுவலகம்

புதிய ஒருங்கிணைந்த முனையக்கட்டிடத்தை பிரதமர் திறந்து வைத்தார்

Posted On: 08 APR 2023 6:12PM by PIB Chennai

தமிழ்நாட்டில் உள்ள சென்னை சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தின் முதல் பகுதியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அதில் இடம்பெற்றுள்ள புதிய வசதிகளையும் அவர் பார்வையிட்டார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம், இந்த பெருநகர மக்களுக்கும், தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்களுக்கும் பெரிதும் உதவும். முனையக்கட்டிடம், தமிழ்நாட்டின் வளமான கலாச்சாரத்தின் சுவையையும் கொண்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பிரதமருடன் தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர் என் ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின், மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய தகவல் ஒலிப்பரப்பு, மீன்வளம், பால்வளம், கால்நடை பராமரிப்புத்துறை இணையமைச்சர் திரு எல் முருகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

ஆண்டுக்கு 2 கோடியே 30 லட்சமாக உள்ள இந்த விமான நிலையத்தின் பயணிகளைக் கையாளும் திறன், ரூ.1,260 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்தப்புதிய ஒருங்கிணைந்த முனையக்கட்டிடம் வாயிலாக, 3 கோடியாக அதிகரிக்கும். இந்த முனையம், உள்ளூர் தமிழ்மக்களின் கலாச்சாரம், பாரம்பரிய அடையாளங்களான கோலம், சேலை, கோவில் ஆகியவற்றையும் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையின் அம்சங்களையும் பறைச்சாற்றுவதாக உள்ளது.

***

SM/ES/RS/KPG/DL



(Release ID: 1914959) Visitor Counter : 136