தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஊடகம், பொழுதுபோக்கு மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு போன்ற துறைகளில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம், அமெசான் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து செயலாற்ற ஒப்பந்தம்

Posted On: 05 APR 2023 5:15PM by PIB Chennai

ஊடகம், பொழுதுபோக்கு மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு போன்ற துறைகளில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம், அமெசான் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து செயலாற்ற ஒப்பந்தம் செய்திருப்பதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்த நிகழ்வில் பேசிய திரு அனுராக் சிங் தாக்கூர், தொன்மையான நாகரீக பின்புலம் கொண்ட இந்தியா இதுவரை பேசாத லட்சக்கணக்கான தகவல்களை வழங்கி வருகிறது. அதாவது ஆன்மீகம் முதல் மென்பொருள் வரையிலும், கலாச்சாரங்கள் முதல் தற்போது ட்ரெண்டில் உள்ள நடப்பு நிகழ்ச்சிகள் வரையிலும், நாட்டுப்புறம் முதல் திருவிழாக்கள் வரையிலும், ஊரக இந்தியப் பகுதியிலிருந்து இந்தியாவின் மேம்பாட்டு பாதை வரையிலும் பல்வேறு விதமான தகவல்கள் நிரம்பப் பெற்றுள்ளது. தற்போது இந்தியாவின் ஆற்றல் சர்வதேச அளவில் வெற்றிகரமாக வெளிகாட்டப்பட்டு வருகிறது. இந்திய நடிகர்கள் வெளிநாட்டு பார்வையாளர்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலம் அடைந்து வருகின்றனர்.

இந்தியாவில் பொழுதுபோக்குத்துறை  மேம்படுவதற்கு சாதகமான சூழ்நிலையை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் திரைத்துறை நிறுவனங்களில் உள்ள திறமையானவர்கள் வெற்றி பெறுவதற்கான இடைப்பட்ட  போராட்டக் காலம் குறையும் என்றும் பன்முகத்தன்மை கொண்ட இந்தியா போன்ற நாட்டில், ஓடிடி நிறுவனங்கள் மூலம் புத்தாக்க பன்முகத்தன்மையும் ஒன்றிணைந்த மக்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகவும் அமையப்பெறும் என்றும் மத்திய அமைச்சர் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினரும், இந்திய திரைப்பட நடிகருமான திரு வருண் தவான் பேசுகையில், இந்திய திரைப்படங்கள் எதிர்பார்க்க முடியாத பார்வையாளர்கள் மத்தியில் திரையிடப்படுவதும், நம் நாட்டின் திறமைகள் உலக அளவில் வெளிகாட்டும் விதமாக அமைவதும் இதன் கூடுதல் சிறப்பாகும் என்றார். இந்நிகழ்வில் அமெசான் பிரைம் வீடியோ நிறுவனத்தின் ஆசியா, பசிபிக் துணைத்தலைவர் திரு கௌரவ் காந்தி, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் இணை செயலர் திரு விக்ரம் சகாய் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

***

AP/GS/RJ/KPG


(Release ID: 1914020) Visitor Counter : 193