இடுகை இடப்பட்ட நாள்:
04 APR 2023 5:59PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தமது இல்லத்தில் , பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக்கை சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து, பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு வருமாறு;
"மாட்சிமை தங்கிய பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக்கை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களது சந்திப்பு அன்பானதாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. இரு நாடுகளுக்குமிடையிலான நெருங்கிய நட்பையும், இந்தியா-பூடான் உறவுகளை புதிய உயரத்திற்கு வழிநடத்தும் மன்னர்களின் தொலைநோக்கு பார்வையையும் மதிக்கிறோம்."
-----
AP/PKV/KPG