பிரதமர் அலுவலகம்
முக்கியத் துறைமுகங்களின் புதிய சாதனைகளுக்கு பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
04 APR 2023 10:24AM by PIB Chennai
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முக்கியத் துறைமுகங்கள், நிதியாண்டு 2022-23இல் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை விட அதிக சரக்குகளைக் கையாண்டு முந்தைய ஆண்டை விட 10.4% வளர்ச்சியைப் பதிவு செய்து சாதனை புரிந்ததற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
795 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டு நாட்டின் முக்கியத் துறைமுகங்கள் வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளன.
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சகத்தின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்து, “அபாரம்”, என்று பிரதமர் கூறியுள்ளார்.
------
AP/RB/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1913536)
வருகையாளர் எண்ணிக்கை : 201
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam