நிதி அமைச்சகம்
மார்ச் 2023-ல் மொத்த ஜிஎஸ்டி மூலம் ரூ 1,60,122 கோடி வசூல்
2022 ஏப்ரல் வசூலுக்கு அடுத்தபடியாக, இரண்டாவது அதிக வசூல்
தொடர்ந்து 12 மாதங்களாக மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் ரூ1.4 லட்சம் கோடிக்கு அதிகமாக வசூல் , ஜிஎஸ்டி தொடங்கப்பட்டதில் இருந்து 2வது முறையாக ரூ 1.6 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
ஜிஎஸ்டி வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 13% வளர்ச்சி
2022-23க்கான மொத்த வசூல் ரூ18.10 லட்சம் கோடி; முழு ஆண்டுக்கான சராசரி மொத்த மாத வசூல் ரூ1.51 லட்சம் கோடி
2022-23ல் மொத்த வருவாய் கடந்த ஆண்டை விட 22% அதிகமாகும்
தமிழ்நாட்டில் ரூ.9,245 கோடி வசூல்
Posted On:
01 APR 2023 4:01PM by PIB Chennai
2023 மார்ச் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,60,122 கோடி, இதில் சிஜிஎஸ்டி ரூ.29,546 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ37,314 கோடி, ஐஜிஎஸ்டி ரூ 82,907 கோடி (பொருட்களின் இறக்குமதியில் வசூலான ரூ42,503 கோடி உட்பட) செஸ் வருவாய் ரூ.10,355 கோடி (பொருட்களின் இறக்குமதியில் வசூலான ரூ 960 கோடி உட்பட). நடப்பு நிதியாண்டில் நான்காவது முறையாக மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ1.5 லட்சம் கோடியைத் தாண்டி ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததில் இருந்து இரண்டாவது அதிகபட்ச வசூலை பதிவு செய்துள்ளது. இந்த மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக ஐஜிஎஸ்டி வசூலை கண்டுள்ளது.
ஐஜிஎஸ்டியிலிருந்து சிஜிஎஸ்டிக்கு ரூ 33,408 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ28,187 கோடியும் வழக்கமான தீர்வாக அரசு வழங்கியுள்ளது. தீர்வுக்குப் பிறகு மார்ச் 2023ல் மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த வருவாய் சிஜிஎஸ்டிக்கு ரூ 62,954 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ 65,501 கோடியும் ஆகும்.
2023 மார்ச் மாதத்திற்கான வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாயை விட 13% அதிகமாகும். மார்ச் 2023 இல் ரிட்டர்ன் தாக்கல் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது.
2022-23 ஆம் ஆண்டிற்கான மொத்த வசூல் ரூ18.10 லட்சம் கோடியாகவும், முழு ஆண்டுக்கான சராசரி மொத்த மாத வசூல் ரூ1.51 லட்சம் கோடியாகவும் உள்ளது. 2022-23ல் மொத்த வருவாய் கடந்த ஆண்டை விட 22% அதிகமாகும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ 8,023 கோடி வசூலாகியிருந்தது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இது ரூ.9,245 கோடியாக உயர்ந்துள்ளது. வளர்ச்சி 15.24% ஆகும்.
புதுச்சேரி கடந்த ஆண்டின் மார்ச் மாத வசூலான ரூ.163 கோடியைவிட, இந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ 204 கோடி வசூலாகியுள்ளது. இது 24.78% அதிகமாகும்.
**********
AD/PKV/DL
(Release ID: 1912911)
Visitor Counter : 368