பிரதமர் அலுவலகம்
கலபுரகியில் பிரதமரின் மித்ரா மெகா ஜவுளி பூங்கா அமைக்கப்படுவதற்காக கர்நாடக மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
28 MAR 2023 5:50PM by PIB Chennai
கலபுரகியில் பிரதமரின் மித்ரா மெகா ஜவுளி பூங்கா அமைக்கப்படுவதற்காக கர்நாடக மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயலின் ட்விட்டர் பதிவிற்கு பதில் அளிக்கும் வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :
"கலபுரகியில் பிரதமரின் மித்ரா மெகா ஜவுளிப் பூங்கா நிறுவப்படுவதற்காக கர்நாடகாவைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள். இந்தப் பூங்கா கர்நாடகாவின் வளமான ஜவுளி பாரம்பரியத்தை கொண்டாடும் என்பதுடன் மக்களுக்கு வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் #PragatiKaPMMitra ".
மக்களவை உறுப்பினர் டாக்டர் உமேஷ் ஜாதவின் ட்விட்டர் பதிவிற்கு பதில் அளிக்கும் வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், இந்த மெகா ஜவுளி பூங்காவின் மூலம் நாட்டின் ஜவுளி பன்முகத் தன்மையை உலகிற்கு எடுத்துரைக்க முடியும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு:
"உண்மையிலேயே கர்நாடகாவுக்கும் குறிப்பாக கலபுரகிக்கும் இது சிறப்பான நாள். இந்த ஜவுளிப் பூங்காவின் மூலம் இந்தியாவின் ஜவுளி பன்முகத் தன்மையையும் நமது மக்களின் படைப்பாற்றலையும் உலகம் அறியும். #PragatiKaPMMitra "
AD/PLM/MA/KRS
***
(रिलीज़ आईडी: 1911587)
आगंतुक पटल : 193
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam