உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் மாதா சாரதாதேவி கோவிலை காணொலி மூலம் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா திறந்து வைத்தார்

प्रविष्टि तिथि: 22 MAR 2023 3:43PM by PIB Chennai

ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் மாதா சாரதாதேவி கோவிலை காணொலி மூலம் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர்  திரு அமித் ஷா இன்று திறந்து வைத்தார். இவ்விழாவில் ஜம்மு காஷ்மிரின்  துணை நிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் உரையாற்றிய திரு அமித் ஷா, மாதா சாரதாதேவி கோவிலில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு   பக்தர்களுக்காக திறந்து வைக்கப்படுவதன் மூலம் உலக நாடுகளைச் சேர்ந்த பக்தர்களும் இங்கு வருவதற்கான வாய்ப்பு உருவாகி இருப்பதாகக்  கூறினார். இன்றைக்கு இந்த கோவில் திறக்கப்பட்டிருப்பதன் மூலம் புதிய சகாப்தம்  தொடங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image001DCL3.jpg

ஒரு காலத்தில் சாரதா பீடம், இந்திய துணைக்கண்டத்தில்  அறிவாற்றலின் மையமாக திகழ்ந்த்தையும், உலக நாடுகளைச் சேர்ந்த கல்வியல் நிபுணர்கள் ஆன்மீக அறிவாற்றலைப் பெறுவதற்காக இங்கு வருகை தந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்திய கலாச்சாரம், மதம், கல்வி பாரம்பரியம் ஆகியவற்றின் வரலாற்று மையமாக சாரதா பீடம் திகழ்வதாகக் குறிப்பிட்ட திரு அமித் ஷா,   பிரதமர்  நரேந்திர மோடியின் தொடர் நடவடிக்கையால் ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலைநாட்டப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image0039WRJ.jpg

 

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image002OQP0.jpg

***

SM/ES/RS/KRS


(रिलीज़ आईडी: 1909586) आगंतुक पटल : 205
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati , Telugu , Kannada