நித்தி ஆயோக்
ஸ்டார்ட் அப் 20 குழுக்கூட்டம் சிக்கிமில் நாளை தொடங்குகிறது
Posted On:
17 MAR 2023 1:51PM by PIB Chennai
ஸ்டார்ட் அப் 20 குழுவின் இரண்டாவது கூட்டம் சிக்கிமின் காங்க்டாக்கில் நாளை தொடங்குகிறது. 2023 மார்ச்-18,19 ஆகிய இரண்டு நாட்கள் இக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்தியாவின் ஜி20 தலைமையின் கீழ், உருவாக்கப்பட்ட ஸ்டார்ட்அப் 20 குழுக்கூட்டத்தில் ஜி20 உறுப்பு நாடுகள், சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கும் நாடுகள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
இது தொடர்பாக, கருத்து தெரிவித்த ஸ்டார்ட் அப் 20-ன் தலைவர் திரு சிந்தன் வைஷ்ணவ், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அமைப்பதற்கான சூழலை வடகிழக்கு பகுதியில் வலுப்படுத்தவும், வடகிழக்கு பகுதியின் தனித்துவமான தன்மைகளை எடுத்துரைக்கவும், சிக்கிமில் நடைபெறும் இந்த ஸ்டார்ட் அப் 20 கூட்டம் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது என்று கூறினார்.
ஸ்டார்ட் அப் 20-ன் முதல் கூட்டம் ஹைதராபாத்தில் 2023 ஜனவரி 28 மற்றும் 29 தேதிகளில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது, இறுதி செய்யப்பட்ட செயல் திட்டங்களை முன்னெடுத்து செல்வது குறித்து சிக்கிமில் நடைபெறும் இரண்டாவது கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும்.
***
SRI/PLM/RS/KRS
(Release ID: 1908099)