உள்துறை அமைச்சகம்
புதுதில்லி விக்யான் பவனில் மார்ச் 10, 2023 அன்று நடைபெற உள்ள பேரிடர் பாதிப்புக் குறைப்புக்கான தேசியக் கட்டமைப்பின் 3-வது அமர்வை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்
प्रविष्टि तिथि:
06 MAR 2023 3:54PM by PIB Chennai
புதுதில்லி விக்யான் பவனில் மார்ச் 10, 2023 அன்று நடைபெற உள்ள பேரிடர் பாதிப்புக் குறைப்புக்கான தேசியக் கட்டமைப்பின் 3-வது அமர்வை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இதில் மத்திய அமைச்சர்கள், மாநிலங்களின் பேரிடர் மேலாண்மை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி நிர்வாகத் தலைவர்கள், பேரிடர் மேலாண்மை முகமைகளின் தலைவர்கள், கல்வியாளர்கள், தனியார் துறை மற்றும் ஊடகப் பிரதிநிதிகள் 1,000-
க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்க உள்ளனர். மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித்ஷா தலைமையில் நடைபெற உள்ள இக்கருத்தரங்கில் பேரிடர் குறைப்புக் குறித்த ஆலோசனைகள், கருத்துகள், அனுபவங்கள், பரிந்துரைகள் ஆகியவை பகிர்ந்து கொள்ளப்பட உள்ளன.
***
AP/IR/RJ/RR
(रिलीज़ आईडी: 1904590)
आगंतुक पटल : 226