சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, மத்திய சுகாதார அமைச்சகம் புதுதில்லியில் "ஆரோக்கியத்திற்காக நடப்போம் (வாக் ஃபோர் ஹெல்த்)" என்ற மெகா வாக்கத்தான்( நடைப்பயிற்சி ) நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது

Posted On: 05 MAR 2023 9:47AM by PIB Chennai

நாடு முழுவதும் உள்ள மாவட்டத் தலைமையகங்களில்  'ஆரோக்கியமான பெண்கள் ஆரோக்கியமான இந்தியா' என்ற கருப்பொருளின் கீழ் சைக்ளாத்தான் (சைக்கிள் ஓட்டம்) நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது.

 

உடல் ஆரோக்கியமும் அதன் நன்மைகளும் தொற்றாத நோய்களின் (NCDs) குறைந்த அபாயத்துடன் தொடர்புடையது. அதோடு மன நலனில் சாதகமான விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.

 

"ஸ்வஸ்தா மான் ஸ்வஸ்தா கர்" இன் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் ஆரோக்கியமான வாழ்க்கை குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஓர் ஆண்டுகால பிரச்சாரம் ஆகும்.

 

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, புதுதில்லியில் "வாக் ஃபார் ஹெல்த்" என்ற மெகா வாக்கத்தான்(நடைப்பயிற்சி) நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. உற்சாகமான பங்கேற்பாளர்கள் சிறந்த ஆரோக்கியத்திற்காக நடை பயணத்தில் மிகுந்த ஆர்வத்துடனும் அதிக எண்ணிக்கையிலும் பங்கேற்றனர். உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும் வகையில் இதுபோன்ற பேரணிகள் நடத்தப்படுகின்றன.

பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் இந்தியாவுக்கான தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றி நடைப்பயிற்சி மற்றும் அதுபோன்ற நிகழ்வுகள் குடிமக்களிடையே மாற்றங்களைக் கொண்டு வருவதையும் உடல் ரீதியாக சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. இதுபோன்ற முன்முயற்சிகளை மேற்கொள்வதில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா ஆர்வமுடையவர். சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் காட்டும் இவர்  "பசுமை எம்.பி" என்றும் அழைக்கப்படுகிறார். உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்திற்காக உடற்பயிற்சிகளை ஊக்குவித்து வருகிறார். தொற்று அல்லாத நோய்கள் (NCDs) நாட்டில் 63% க்கும் அதிகமான இறப்புகளுக்கு காரணமாகின்றன. இத்தகைய மரணங்கள் புகையிலை பயன்பாடு, புகைபிடித்தல், மது அருந்துதல், மோசமான உணவுப் பழக்கம் போன்ற முக்கிய முறையற்ற மற்றும் தீய பழக்கங்களால் ஏற்படுகின்றன. முறையற்ற பழக்கவழக்கங்கள், காற்று மாசுபாடு உடற்பயிற்சியின்மை ஆகியவை நோய்களுக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. தொற்றாத நோய்களுக்கான தேசிய கண்காணிப்பு ஆய்வின் (NNMS) (2017- 18) இன் போது 41.3% இந்தியர்கள் உடல் ரீதியாக செயலற்ற நிலையில் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. உடல் செயல்பாடுகளின் ஆரோக்கிய நன்மைகள் இருதய நோய், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, புற்றுநோய் போன்ற தொற்றாத நோய்களின்  அபாயத்தைக் குறைக்கிறது. அதோடு மன ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. மனத்தளர்ச்சி நோய் வருவதைக் குறைத்து   நல்வாழ்வை மேம்படுத்துகிறது.

 

 சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இன்று உடல் மற்றும் மன நலம் காக்கவும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையிலும் நாடு முழுவதும் உள்ள மாவட்டத்  தலைமையகங்களில் 2023 மார்ச் 5 ஆம் தேதி சைக்கிள் ஓட்டுதல் நிகழ்ச்சி  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 'ஆரோக்கியமான பெண்கள் ஆரோக்கியமான இந்தியா' என்ற கருப்பொருளில் சைக்கிள் ஓட்டும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த சைக்கிள் ஓட்டும் போட்டியில் பொதுமக்களைக் கவரும் வகையில் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். நிகழ்வின் கருப்பொருளே பெண்களின் ஆரோக்கியம் முக்கியமானது என்பதை சித்தரிக்கிறது. ஆரோக்கியமான பெண்கள் தங்கள் குடும்பத்தில் மட்டுமல்ல சமூகத்திலும் பங்களித்து இந்தியாவை ஆரோக்கியமான தேசமாக மாற்றுகிறார்கள்.

 

இருப்பினும், மாவட்டத் தலைமையகங்களில் சைக்கிள் ஓட்டுதல் நிகழ்வை நிறைவு செய்யும் வகையில் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக "ஆரோக்கியத்திற்காக நடப்போம்" என்ற மற்றொரு நிகழ்ச்சியும் டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சி விஜய் சௌக்கில் இருந்து கடமைப் பாதையில்  தொடங்கி இந்தியா கேட் வழியாக நிர்மான் பவன் சென்றடைந்தது.

முன்னதாக, பிப்ரவரி 2023 இல், இதேபோன்ற சைக்கிள் ஓட்டுதல் நிகழ்வு அனைத்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் உள்ள 1.5 லட்சம் ஆயுஷ்மான் பாரத்- சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்களில் (AB-HWC) 'ஸ்வஸ்தா மான் ஸ்வஸ்தா கர்' என்ற கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது.

 

திரு. விஷால் சவுகான், இணைச் செயலர், அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், மத்திய அரசு மருத்துவமனைகளான சப்தர்ஜங் மருத்துவமனை, ராம் மனோகர் லோஹியா (ஆர்எம்எல்) மருத்துவமனை மற்றும் லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியின் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களும் இந்த நடைப்பயிற்சி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, மனநோய் மற்றும் புற்றுநோய் போன்ற வாழ்க்கை முறை உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள்/நோய்களைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கையை கடைப்பிடிக்கவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

***

AP/CJR/DL


(Release ID: 1904396) Visitor Counter : 295