இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், பஞ்சாப் மாநிலத்தில் ஐஐடி ரோபாரில் இருந்து நாடு தழுவிய இளைஞர் விழாவைத் தொடங்கி வைத்தார்

Posted On: 04 MAR 2023 1:28PM by PIB Chennai

மத்திய இளைஞர் நலன் விவகாரங்கள் & விளையாட்டு, தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு.அனுராக் சிங் தாக்கூர் இன்று பஞ்சாபில் உள்ள ஐஐடி ரோபரில் இருந்து இளைஞர் விழா-இந்தியா@2047 என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

பிரதாப்கர் (உ.பி.), ஹரித்வார் (உத்தராகண்ட்), தார் மற்றும் ஓசங்காபாத் (ம.பி.), ஹனுமன்கர் (ராஜஸ்தான்), சராய்கேலா (ஜார்கண்ட்), கபுர்தலா (பஞ்சாப்), ஜல்கான் (மஹாராஷ்டிரா), விஜயவாரா (ஆந்திரப் பிரதேசம்), கரீம் நகர் (தெலுங்கானா), பாலக்காடு (கேரளா), கடலூர் (தமிழ்நாடு) ஆகிய இடங்களில் இளைஞர் விழா ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது. முதல் கட்டமாக 2023 31 மார்ச்-க்குள் நாடு முழுவதும் 150 மாவட்டங்களில் இளைஞர் சக்தியைக் கொண்டாடும் வகையில் இளைஞர் விழா நடத்தப்படும்.

நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, இளைஞர்களிடையே பேசிய அனுராக் சிங் தாக்கூர், உலகிலேயே அதிக இளைஞர் சக்தியை நம் நாடு கொண்டுள்ளதாகவும், நமது மகத்தான திறனை அடைய பாடுபட வேண்டும் என்றும் அனுராக் சிங் தாக்கூர் குறிப்பிட்டார்.

மேலும், மாணவர்கள் தங்களுடைய மனதில் பாதிப்பை ஏற்படுத்திய சமூகப் பிரச்சனையைத் தேர்ந்தெடுத்து அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். "இளைஞர்களே வருங்காலத்தை உருவாக்குபவர்கள்" என்றும் அவர் கூறினார்.

பின்னணி;

இளைஞர் நலன் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் இளைஞர் அமைப்பான நேரு யுவ கேந்திரா சங்கதன் நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இளைஞர் விழா-இந்தியா@2047 நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறது. இதன்படி, மாவட்ட அளவிலான இளைஞர் விழா 2023 மார்ச்  முதல் ஜூன் வரை நடைபெற உள்ளது.

மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்கள், 2023 ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை நடைபெறும் மாநில அளவிலான நிகழ்ச்சியில் பங்கேற்பர். இதில் வெற்றி பெறுபவர்கள், 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் டெல்லியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான இளைஞர் விழாவில் பங்கேற்பர்.

கீழ்க்கண்ட தலைப்புகளில் இளம் கலைஞர்கள், எழுத்தாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், பேச்சாளர்கள் போட்டியிடவுள்ளனர்.

1. வளர்ந்த இந்தியாவின் இலக்கு

2. அடிமைத்தனம் அல்லது காலனித்துவ மனநிலையை அகற்றுதல்

3. நமது பாரம்பரியம் மற்றும் மரபுகளில் பெருமிதம் கொள்ளுதல்

4. ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு

5. குடிமக்களின் கடமை உணர்வு.

 

15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இந்த போட்டிகளில் பங்கேற்கலாம்.

 

***

AP/CR/DL


(Release ID: 1904183) Visitor Counter : 185