ஆயுஷ்
ஆயுஷ் அமைச்சகத்தின் முதலாவது சிந்தனை அமர்வை மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் தொடங்கி வைத்தார்
Posted On:
27 FEB 2023 4:36PM by PIB Chennai
அசாம் மாநிலம் காசிரங்கா தேசிய பூங்காவில் ஆயுஷ் அமைச்சகத்தின் முதலாவது சிந்தனை அமர்வை மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆயுஷ் துறையின் அபரிமிதமான திறன் குறித்துப் பேசினார். ஆதாரம் அடிப்படையிலான அறிவியல் பூர்வ ஆராய்ச்சியில் ஈடுபடுமாறு இளைய ஆராய்ச்சியாளர்களையும், அறிவியலாளர்களையும் அவர் கேட்டுக்கொண்டார். ஆயுஷ் மருத்துவ முறையின் ஆராய்ச்சி மற்றும் பயன்கள் குறித்து உள்ளுர் மொழிகளில் விளக்குமாறும் இதன் மூலம் பெருமளவிலான மக்களை அது சென்றடையும் என்றும் கூறினார்.
ஆயுஷ் துறையின் டிஜிட்டல் சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பம் குறித்த முதல் அமர்வில் பங்கேற்ற ஆயுஷ் துறை இணையமைச்சர் டாக்டர் மகேந்திர முஞ்ச்பாரா, ஆயுஷ் துறையின் வலிமையை உலக நாடுகள் தற்போது உணர்ந்து வருவதாகத் தெரிவித்தார்.
முதலாவது நாள் அமர்வில் ஆயுஷ் துறையில் டிஜிட்டல் சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பம் இரண்டாவது அமர்வில் ஆயுஷ் ஆராய்ச்சி, எதிர்கால உத்தி, சவால்கள், மூன்றாவது அமர்வில் ஆயுஷ் கல்வி, எதிர்கால முன்னெடுப்பு, திறன் கட்டமைப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம், தேசிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்கப்பட்டது.
இரண்டாம் நாள் அமர்வில் ஆயுஷ் மருந்து தொழிற்சாலைகளின் தற்போதைய சவால்கள், முன்னெடுத்தி செல்லுதல் ஆயுஷ் பொருட்களின் சேவைகள் மற்றும் தரம் ஆய்வு குறித்து விவாதிக்கப்படும்.
***
AP/IR/RJ/KRS
(Release ID: 1902821)
Visitor Counter : 142