பிரதமர் அலுவலகம்

மேகாலயாவில் உள்ள ஒவ்வொரு வாக்காளரையும் சென்றடையும் முயற்சிகளுக்காகத் தேர்தல் ஆணையத்தைப் பிரதமர் பாராட்டியுள்ளார்

Posted On: 26 FEB 2023 11:07AM by PIB Chennai

மேகாலயாவில் தகுதியுள்ள ஒவ்வொரு வாக்காளரும் எளிதாக வாக்களிக்க முடியும் என்பதை உறுதிசெய்ய தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் மகத்தான முயற்சியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டினார்.

மேகாலயாவில் தேர்தல் நடைபெறும் 59 சட்டமன்ற தொகுதிகளுக்கு 974 வாக்குச்சாவடி  குழுக்களைத் தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.

மேலும், வாக்குச் சாவடிக் குழுவினர் கடினமான நிலப்பரப்புகளில் மணிக்கணக்கில் நடந்து, 35 வாக்காளர்களை மட்டுமே கொண்டுள்ள கம்சிங் வாக்குச் சாவடிக்குச் சென்றுள்ளனர். ஒரு வாக்காளரையும்  விட்டுவிடாமல் இருக்க பாரம்பரிய காசி கூடைகளைப் பயன்படுத்தி வாக்குச் சாவடிப் பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர்.

மேகாலயா பிஐபி வெளியிட்ட ட்விட்டர் செய்திக்கு பதிலளித்துப் பிரதமர் வெளியிட்ட  ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

 "தகுதியுள்ள ஒவ்வொரு வாக்காளரும் எளிதாக வாக்களிக்க முடியும் என்பதை உறுதிசெய்ய தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் மகத்தான முயற்சிக்கு இது மேலும் ஒரு எடுத்துக்காட்டாகும். இந்தக் குழுக்களில் அங்கம் வகிக்கும் அனைவருக்கும் பாராட்டுக்கள். இது வாக்காளர்களை சாதனை எண்ணிக்கையில் வாக்களிக்கச்செய்து  நமது ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தவும்  உத்வேகம் அளிக்கும்."

***

SRI / SMB / DL



(Release ID: 1902615) Visitor Counter : 134