பிரதமர் அலுவலகம்

உ.பி வேலைவாய்ப்பு விழாவில் பிரதமர் உரையாற்றினார்


"இன்றைய நியமனம் 9 ஆயிரம் குடும்பங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதுடன் உ.பி.யில் பாதுகாப்பு உணர்வை அதிகரிக்கும்"

"பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பின் ஒருங்கிணைந்த சக்தி உ.பி.யின் பொருளாதாரத்திற்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது"

"2017 ஆம் ஆண்டு முதல் உ.பி காவல்துறையில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான புதிய நியமனங்கள் மூலம், வேலைவாய்ப்பு, பாதுகாப்பு ஆகிய இரண்டும் மேம்பட்டுள்ளன"

“காவல்துறை பணிக்கு வரும்போது உங்களுக்கு கையில் கோல் கிடைக்கும், ஆனால் கடவுள் உங்களுக்கு ஒரு இதயத்தையும் கொடுத்திருக்கிறார். நீங்கள் கருணை உணர்வு கொண்டவராக இருப்பதுடன் செயல்பாடுகளை உணர்திறன் கொண்டதாக மாற்ற வேண்டும்’’.

"நீங்கள் மக்களுக்கு சேவை, பலம் ஆகிய இரண்டின் பிரதிபலிப்பாகவும் இருக்க முடியும்"

Posted On: 26 FEB 2023 12:54PM by PIB Chennai

உத்தரப் பிரதேச அரசின் வேலைவாய்ப்பு  விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் உரையாற்றினார்.  விழாவில், உபி காவல்துறையில் உதவி ஆய்வாளர்கள் , நாக்ரிக் காவல் பிரிவில்  அதற்கு இணையான பணியிடங்கள், படைப்பிரிவு தளபதிகள், தீயணைப்புத் துறை இரண்டாம் நிலை அதிகாரிகள் ஆகியோருக்கு நேரடி நியமன ஆணைகள்  வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், பிஜேபி ஆளும் மாநிலங்களில் ஒவ்வொரு வாரமும் வேலைவாய்ப்பு விழாவில்  உரையாற்றும் வாய்ப்பு கிடைத்து வருவதாகவும், அரசு அமைப்பில் புதிய சிந்தனை மற்றும் செயல்திறனைக் கொண்டு வரும் பல திறமையான இளைஞர்களை நாடு தொடர்ந்து பெற்று வருவதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

இன்று உ.பி. வேலைவாய்ப்பு விழாவின்  சிறப்பு முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர், இது 9 ஆயிரம் குடும்பங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் என்றும், புதிய ஆட்சேர்ப்புகள் மாநிலத்தில் காவல்துறையை வலுப்படுத்தும் என்பதால் உத்தரபிரதேசத்தில் பாதுகாப்பு உணர்வை அதிகரிக்கும் என்றும் கூறினார். 2017 ஆம் ஆண்டு முதல் உபி காவல்துறையில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான புதிய நியமனங்கள் மூலம், தற்போதைய ஆட்சியின் கீழ் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு ஆகிய இரண்டும் மேம்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.

மாஃபியா, சீர்கெட்ட  சட்டம்-ஒழுங்கு நிலைமையின் முந்தைய பிம்பத்திலிருந்து வெகு தொலைவில், இன்று உத்தரப்பிரதேசம் அதன் சட்டம்  ஒழுங்கு மற்றும் மேம்பாட்டு நோக்குநிலைக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று திரு மோடி கூறினார்.  இதன் மூலம் தொழில், வர்த்தகம் மற்றும் முதலீடு போன்ற புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன என்றார் அவர்.

இரட்டை என்ஜின் அரசின் முயற்சிகளை எடுத்துரைத்த பிரதமர், புதிய விமான நிலையங்கள், பிரத்யேக சரக்கு வழித்தடம், புதிய பாதுகாப்பு வழித்தடம், புதிய மொபைல் உற்பத்தி அலகுகள், நவீன நீர்வழிகள், முன்னெப்போதும் இல்லாத  வகையில் வேலை வாய்ப்புகளை கொண்டு வரும் புதிய உள்கட்டமைப்பு ஆகியவற்றைப் பட்டியலிட்டார். உ.பி.யில் அதிவேக நெடுஞ்சாலைகள் அதிகம் உள்ளதாகவும், நெடுஞ்சாலைகள் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இவை வேலைவாய்ப்பை உருவாக்குவதுடன் மட்டுமின்றி, மாநிலங்களில் பல திட்டங்களுக்கும் வழி வகுக்கிறது. அரசின் சுற்றுலாத்துறையின் உந்துதல் வேலைவாய்ப்பின் அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். சமீபத்திய உலகளாவிய முதலீட்டாளர் உச்சி மாநாட்டில் உற்சாகமான பதிலையும், அது மாநிலத்தில் வேலைவாய்ப்பை எவ்வாறு உயர்த்தும் என்பதையும் திரு மோடி குறிப்பிட்டார்.

"பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பின் ஒருங்கிணைந்த சக்தி உ.பி.யின் பொருளாதாரத்திற்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது" என்று பிரதமர் கூறினார். முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை பிணையில்லா கடன்கள், ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு திட்டம், செழிப்பான எம்எஸ்எம்இ மற்றும் துடிப்பான ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பு ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டினார்.

புதிதாக நியமனம் செய்யப்பட்டவர்களிடம், புதிய சவால்கள் மற்றும் பொறுப்புகள் குறித்துப் பேசிய பிரதமர், அதில் கற்றலை உயிர்ப்புடன்  வைத்திருக்கும்படி கேட்டுக் கொண்டார். அவர்களின் ஆளுமை மேம்பாடு, முன்னேற்றம் மற்றும் அறிவு ஆகியவற்றுடன் தொடர்ந்து பணியாற்றுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

“நீங்கள் இந்த சேவைக்கு வரும்போது, காவல்துறையிடம் இருந்து  உங்களுக்கு ஒரு கோல் கிடைக்கிறது, ஆனால் கடவுள் உங்களுக்கும் ஒரு இதயத்தையும் கொடுத்திருக்கிறார். அதனால்தான் நீங்கள் கருணை உள்ளம்  உடையவராக இருக்க வேண்டும். மேலும் செயல்பாட்டில் அந்த உணர்வுடன் இருக்க  வேண்டும்” என்று புதிய பணியாளர்களிடம் பிரதமர் கூறினார். விழிப்புணர்வு மற்றும் சைபர் குற்றங்கள், தடய அறிவியல் போன்ற நவீனப் பகுதிகளை மேம்படுத்தி, ஸ்மார்ட் போலிசிங்கை ஊக்குவிக்கும் பயிற்சி குறித்தும் அவர் பேசினார்.

பாதுகாப்பு மற்றும் சமூகத்திற்கு வழிகாட்டுதல் ஆகிய இரண்டின் பொறுப்பும் புதிய பணியாளர்களுக்கு இருக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். “மக்களுக்கான சேவை, வலிமை ஆகிய இரண்டின் பிரதிபலிப்பாகவும் நீங்கள் இருக்க முடியும்” என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

***

SRI / PKV / DL



(Release ID: 1902532) Visitor Counter : 145