பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
சணல் பேக்கேஜிங் பொருள் சட்டம் 1987-இன் கீழ், சணல் ஆண்டு 2022-23க்கான சணல் பைகளுக்கான விதிமுறைகள்
Posted On:
22 FEB 2023 4:54PM by PIB Chennai
சணல் ஆண்டு 2022-23 இல் அரிசி, கோதுமை மற்றும் சர்க்கரையை பேக் செய்வதில் சணலை கட்டாயமாக்குவதற்கான விதிமுறைகளுக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கட்டாய பேக்கேஜிங் விதிமுறைகளின் படி உணவு தானியங்களில் 100%மும் சர்க்கரையில் 20%மும் சணல் பைகளில் பேக் செய்யப்பட வேண்டும். இதன் மூலம் மேற்கு வங்கம் பெருமளவு பயனடையும்.
இந்தியாவின் பொருளாதாரத்தில் சணல் தொழில் முக்கிய இடம் வகிக்கிறது. குறிப்பாக 75 சணல் ஆலைகள் இயங்கும் மேற்கு வங்கத்தில் லட்சக்கணக்கான பணியாளர்களுக்கு வாழ்வாதாரமாக இத்தொழில் செயல்படுகிறது. சணல் துறையில் ஈடுபட்டுள்ள 40 லட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு இது ஆதரவளிக்கும். பிகார், ஒடிசா, அசாம், திரிபுரா, மேகாலயா, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் உள்ள சணல் துறையினருக்கும் இந்த முடிவு உதவிகரமாக இருக்கும்.
சணல் பேக்கேஜிங் பொருள் சட்டத்தின் விதிமுறைகளின் படி 3.70 லட்சம் தொழிலாளர்கள் மற்றும் 40 லட்சம் விவசாய குடும்பங்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை சணல் துறை வழங்குகிறது. சணல் பேக்கேஜிங் பொருள் சட்டம் 1987, சணல் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சணல் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபடும் நபர்களின் நலன்களைப் பாதுகாக்கிறது. சணல் தொழில்துறையின் மொத்த உற்பத்தியில் 75%சணல் சாக்கு பைகள் ஆகும். இதில் 85% இந்திய உணவுக் கழகம் மற்றும் மாநில கொள்முதல் முகமைகளுக்கு வழங்கப்படுகிறது. மீதமுள்ளவை நேரடியாக ஏற்றுமதி/விற்பனை செய்யப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.9,000 கோடி மதிப்பிலான சணல் சாக்கு பைகளை உணவு தானியங்களை பேக்கிங் செய்வதற்காக அரசு கொள்முதல் செய்கிறது. இதனால் சணல் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் விளைபொருட்களுக்கு உத்தரவாதமான சந்தை உறுதி செய்யப்படுகிறது. இந்த விதிமுறைகளால் இந்தியாவில் கச்சா சணல் மற்றும் சணல் பைகளின் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கப்பட்டு தற்சார்பு இந்தியா திட்டத்திற்கு இணங்க இத்துறையில் இந்தியா தன்னிறைவு அடையும்.
(Release ID: 1901679)
***
AP/RB/KRS
(Release ID: 1901995)
Visitor Counter : 167
Read this release in:
Hindi
,
Gujarati
,
English
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam