பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

41 வது பிரகதி கலந்துரையாடல் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை வகித்தார்

Posted On: 22 FEB 2023 7:14PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி 41 வது பிரகதி கூட்டத்திற்கு இன்று தலைமை வகித்து திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். முனைப்பான நிர்வாகம் மற்றும் குறித்த காலத்தில் அமலாக்கம் செய்தல் என்ற தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான பன்னோக்குத் தளமான பிரகதியில் திட்டங்கள் குறித்து பிரதமர் ஆய்வு மேற்கொண்டார்.

13 மாநிலங்களில் மேற்கொற்ள்ளப்பட்டு வரும் ரூ.41,500 கோடி மதிப்பிலான 9 முக்கியமான உட்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்து பிரதமர் ஆய்வு செய்தார். சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் 3 திட்டங்கள், ரயில்வே அமைச்சகத்தின் 2 திட்டங்கள், மின்சாரம், நிலக்கரி, பெட்ரோலியம், சுகாதாரம் ஆகிய அமைச்சகங்கள் சார்பில் தலா ஒரு திட்டம் ஆகியவைக் குறித்து பிரதமர் ஆய்வு மேற்கொண்டார். இந்தத் திட்டங்கள் தமிழ்நாடு, பஞ்சாப், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

பிரதமரின் விரைவு சக்தி இணையதளத்தை உட்கட்டமைப்பு திட்டங்களின் திட்டமிடலுக்குப் பயன்படுத்துமாறு பிரதமர் அமைச்சகங்களுக்கு அறிவுறுத்தினார். நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்கு விரைந்து தீர்வு கண்டு திட்டங்களை விரைந்து நிறைவேற்றுமாறு அவர் வலியுறுத்தினார். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

அமிர்த சரோவர் எனப்படும் நீர் நிலைகள் இயக்கம் தொடர்பாகவும் பிரதமர் ஆய்வு செய்தார். 50,000 நீர் நிலைகள் தொடர்பான பணிகளை குறித்த காலத்தில் நிறைவேற்ற வட்டார அளவில் கண்காணிப்புப் பணிகள் நடைபெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதுவரை நடைபெற்ற பிரகதி கூட்டங்களில் ரூ.15.82 லட்சம் மதிப்பிலான 328 திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

***

AP/PLM/SG/KRS


(Release ID: 1901532) Visitor Counter : 231