மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
பள்ளிக் கல்வியில் நிலை-I க்கான மாணவர் சேர்க்கை வயதை 6 ஆக மாற்றி அமைக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்
Posted On:
22 FEB 2023 12:28PM by PIB Chennai
தேசிய கல்விக் கொள்கை 2020, அடிப்படை கல்வி நிலையில் குழந்தைகளின் கற்றலை பரிந்துரைக்க முன்னுரிமை அளித்து பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அடிப்படை நிலை அனைத்து குழந்தைகளுக்கும் 5 ஆண்டு கற்றலை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. 3 வயதுக்கும் 8 வயதுக்கும் இடையே இந்த நிலை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் 3 ஆண்டுகள் பள்ளிக்கு முந்தைய கல்வியும் 2 ஆண்டுகள் அடிப்படை நிலை I மற்றும் நிலை II கல்வியும் அடங்கும். அங்கன்வாடிகள், அரசு, அரசு உதவி பெறும் மையங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்தும் மழலையர் மையங்கள் ஆகியவற்றில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தரமான மழலையர் கல்வியை 3 ஆண்டுகளுக்கு வழங்குவதை உறுதி செய்வதன் மூலமாக மட்டுமே இதை மேற்கொள்ள முடியும். இது தவிர அடிப்படைக் கல்வி கட்டத்தின் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் சிறப்பாக அமைய, பயிற்சி பெற்ற தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் தேவை முக்கியமானதாகும். அடித்தள நிலைக்கான பாடத்திட்ட கட்டமைப்பு 20.10.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த தொலைநோக்குப் பார்வையை எட்ட கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை 09.02.2023 அன்று அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. அதில் பள்ளிக் கல்வியில் நிலை-Iக்கான மாணவர் சேர்க்கை வயதை 6 க்கு மேல் மாற்றியமைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்விக்கு முந்தைய மழலையர் கல்வியில் 2 ஆண்டு பட்டயப் படிப்பை வடிவமைத்து நடத்துமாறும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்தப் பாடத்திட்டம், மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலால் வடிவமைக்கப்பட்டு மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
***
SRI/PLM/SG/KRS
(Release ID: 1901294)
Visitor Counter : 214